×

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பார்கள் – மத்திய அரசைத் தாக்கும் சீமான் !

காஷ்மீரை இரண்டாகப் பிரித்தது போல தமிழகத்தையும் மூன்றாகப் பிரித்தாலும் பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதனை, ஜம்முவை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு பிரித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதில் காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம்,
 
தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பார்கள் – மத்திய அரசைத் தாக்கும் சீமான் !

காஷ்மீரை இரண்டாகப் பிரித்தது போல தமிழகத்தையும் மூன்றாகப் பிரித்தாலும் பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதனை, ஜம்முவை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு பிரித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதில் காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டு துண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள். அதற்கடுத்து சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம். ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News