×

டாஸ்மாக் கடைகளை 6 மணிக்கு மூட உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை 6 மணிக்குள் மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். தொடர்ந்து 11 நாட்கள் சிகிச்சையில் உள்ள அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும், அவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அடுத்தடுத்து வரும் மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து காவலர்களும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும்
 
டாஸ்மாக் கடைகளை 6 மணிக்கு மூட உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை 6 மணிக்குள் மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். தொடர்ந்து 11 நாட்கள் சிகிச்சையில் உள்ள அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும், அவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அடுத்தடுத்து வரும் மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து காவலர்களும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News