×

ஆசிரியரின் பாத்திரங்களைக் கழுவும் மாணவிகள் – அரசுப் பள்ளியில் அவலம் !

தஞ்சாவூர் அருகே உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் ஆசிரியையின் மதிய உணவுப் பாத்திரங்களை மாணவிகள் கழுவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், கொத்தங்குடிப் பகுதியில் உள்ள கணேசமூர்த்தி அரசு உதவிப் பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அதில் மொத்தமே 45 மாணவ மாணவிகள் மட்டுமேப் படித்து வருகின்றனர். இந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக தையல் நாயகி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியையின் மதிய உணவுப்பாத்திரங்களை மாணவிகள் சிலர் கழுவுவது போல வீடியோக்
 
ஆசிரியரின் பாத்திரங்களைக் கழுவும் மாணவிகள் – அரசுப் பள்ளியில் அவலம் !

தஞ்சாவூர் அருகே உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் ஆசிரியையின் மதிய உணவுப் பாத்திரங்களை மாணவிகள் கழுவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர், கொத்தங்குடிப் பகுதியில் உள்ள கணேசமூர்த்தி அரசு உதவிப் பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.  அதில் மொத்தமே 45 மாணவ மாணவிகள் மட்டுமேப் படித்து வருகின்றனர். இந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக தையல் நாயகி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ஆசிரியையின் மதிய உணவுப்பாத்திரங்களை மாணவிகள் சிலர் கழுவுவது போல வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி விசாரித்த போது ‘ ஆசிரியை மாணவிகளுக்கும் சேர்த்து உணவுக் கொண்டு வருவார். அதை சாப்பிட்ட பின் மாணவிகள் அன்பாக அதைக் கழுவி தருவார்கள். இதை சில விஷமிகள் தவறான எண்ணத்துடன் வீடியோ எடுத்துப் பரப்பி வருகின்றனர். ’ எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சம்மந்தப்பட்ட வீடியோக் குறித்து தொடக்கக் கல்வி அலுவலர் நடராஜன் தலைமையில் அந்தப்பள்ளியில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News