×

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரானார் தங்க தமிழ்ச்செல்வன்…

Thanga tamilselvan new post in dmk – அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் அணி கைப்பற்றியதும், டிடிவி தினகரன் பக்கம் சென்றார் தங்க தமிழ்ச்செல்வன். அதன்பின் தினகரனுடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார். எனவே, அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக அவர் திமுகவில் இணைந்தார்.
 
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரானார் தங்க தமிழ்ச்செல்வன்…

Thanga tamilselvan new post in dmk – அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் அணி கைப்பற்றியதும், டிடிவி தினகரன் பக்கம் சென்றார் தங்க தமிழ்ச்செல்வன். அதன்பின் தினகரனுடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார். எனவே, அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக அவர் திமுகவில் இணைந்தார்.

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரானார் தங்க தமிழ்ச்செல்வன்…

எனவே,தேனி மாவட்டத்தில் திமுகவை வளர்க்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு அவருக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை விட அதிக மதிப்புடைய திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி ஏற்கனவே திருச்சி சிவா, ஆர்.ராசா வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வி.பி.கலைராஜன் திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக நெசவாளர் அணி செயலாளராக கே.எம். நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News