×

அதிமுக நாளிதழின் கேவலமான செயல் – இணையத்தில் பெருகும் கண்டனம் !

அதிமுகவின் நாளேடான நமது அம்மா கமலை இழிவுபடுத்தும் விதமாக மிகவும் கீழ்த்தரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற
 
அதிமுக நாளிதழின் கேவலமான செயல் – இணையத்தில் பெருகும் கண்டனம் !

அதிமுகவின் நாளேடான நமது அம்மா கமலை இழிவுபடுத்தும் விதமாக மிகவும் கீழ்த்தரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது

அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன்  ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி  கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று  கூறினார்.

கமலின் இந்த பேச்சுக்கு பாஜகவை விட அதிமுக அதிகமாகவும் வரைமுறைக் கடந்தும் எதிர்வினையாற்றி வருகிறது. கமலின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘ கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார்.

இதைப்பற்றி செய்தி வெளியிட்ட நமது அம்மா நாளிதழ் கமலைப் பொலிக்காளை என்றும் அவருக்கு இந்து தர்மம் புரியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. அதோடு இல்லாமல் கமல் அவர் மகள் ஸ்ருதிஹாசனுக்கு முத்தமிடும் புகைப்படத்தை இந்த செய்தியில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் சமூகவலைதளங்களில் அதிமுக நாளிதழின் இந்த தரங்கெட்ட செயலுக்குக் கணடனங்கள் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News