×

இப்படி ஆகிப்போச்சே! ரஜினியும் கமலும் இணைந்தால்..?… அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்

தேவைப்பட்டால் கமலுடன் கூட்டணி அமைப்பேன் என ரஜினி கூறியிருப்பது தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். மக்களின் நன்மை கருதி தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இணைவோம் என ரஜினியும், கமலும் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த விவாகரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இப்படி ஆகிப்போச்சே! ரஜினியும் கமலும் இணைந்தால்..?… அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்

தேவைப்பட்டால் கமலுடன் கூட்டணி அமைப்பேன் என ரஜினி கூறியிருப்பது தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார்.

மக்களின் நன்மை கருதி தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இணைவோம் என ரஜினியும், கமலும் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த விவாகரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன் பேசிய கமல்ஹாசன் ‘தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைவேன் என்றுதான் சொல்லியிருக்கிறோம். எப்போது இணைவோம் என்ற தேதியெல்லாம் இப்போது கூற முடியாது. அப்படி இணையும் போது அதில் எங்கள் நட்பை விட முக்கிய செய்தியாக தமிழகத்தின் நலனே இருக்கும்’ என அவர் தெரிவித்தார்.

இப்படி ஆகிப்போச்சே! ரஜினியும் கமலும் இணைந்தால்..?… அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்

ரஜினியின் பேட்டி பாஜக மேலிடத்திற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏனெனில், தமிழகத்தில் திராவிட கட்சிகளே ஆட்சி அமைக்கும் என்கிற நிலையை மாற்ற, ரஜினியை பயன்படுத்த பாஜக தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.

அதனால்தான், ரஜினிக்கு எதிராக பாஜகவினர் பேசவே மாட்டார்கள். அதோடு, மோடி செயல்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவாக முதல் ஆளாக ரஜினி தொடர்ந்து பேசி வருகிறார். ரஜினி கட்சி துவங்கும் போது அவருடன் இணைந்து செயல்படுவது அல்லது தங்கள் கூட்டணியில் அவரையும் இணைக்க பாஜக தரப்பில் திட்டமிடப்படிருந்ததாக கூறப்படுகிறது.

இப்படி ஆகிப்போச்சே! ரஜினியும் கமலும் இணைந்தால்..?… அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்

ஆனால், தற்போது திடீரென கமலுடன் கூட்டணி அமைப்பேன் என ரஜினி கூறியிருப்பது பாஜகவை அப்செட் ஆக்கியுள்ளதாம். அதோடு, கமலும், ரஜினியும் தனித்து செயல்படுவார்கள். அதனால், தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கணக்குப்போட்டிருந்த அதிமுக, திமுக கட்சிகளும் ரஜினி – கமல் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். ஏனெனில் இருவரும் இணையும் போது கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை அவர்கள் பெற்றுவிடுவார்கள். வாக்குகள் பிரியும்.. இது தங்களின் வெற்றியை பாதிக்கும் என அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News