×

இனிமேதான் நீங்க பாக்கப்போறீங்க – கோவை சரளா பேட்டி

Kovai Sarala – கட்சி தொடங்கி 14 மாதத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர் என அக்கட்சியின் உறுப்பினரும், நடிகையுமான கோவை சரளா தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக் கட்சிகள் 38 தொகுதிகளையும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட்ட அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் எந்த தொகுதியிலும் முன்னிலைப் பெற முடியவில்லை. ஆனால் முதல்முறையாக தேர்தலை சந்தித்துள்ள கமல்ஹாசனின் மக்கள்
 
இனிமேதான் நீங்க பாக்கப்போறீங்க – கோவை சரளா பேட்டி

Kovai Sarala – கட்சி தொடங்கி 14 மாதத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர் என அக்கட்சியின் உறுப்பினரும், நடிகையுமான கோவை சரளா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக் கட்சிகள் 38 தொகுதிகளையும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட்ட அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் எந்த தொகுதியிலும் முன்னிலைப் பெற முடியவில்லை.

இனிமேதான் நீங்க பாக்கப்போறீங்க – கோவை சரளா பேட்டி

ஆனால் முதல்முறையாக தேர்தலை சந்தித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்து நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. படித்தவர்கள் மற்றும் நகர்ப்புறங்கள் அடங்கிய தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்திற்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், இதுபற்றி பிரபல வார இதழுக்கு கருத்து தெரிவித்த கோவை சரளா “மக்கள் நீதிமய்யம் கட்சி தொடங்கி 14 மாதங்கள்தான் ஆகிறது. ஆனால், கனிசமான வாக்குகளை பெற்றுள்ளோம். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். அடுத்த தேர்தலில் இன்னும் அதிகமாக உழைப்போம். தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதை நீங்கள்தான் பார்க்கப் போகிறீர்கள். மக்களின் ஆதரவை பெற இன்னும் கடுமையாக உழைக்கப் போகிறோம்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News