×

அதிமுக தொண்டர் கொலை – வேலூரில் தேர்தல் நாளில் பதட்டம் !

வேலூரில் அதிமுக தொண்டர் ஒருவர் இன்று காலை கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேலூர் தொகுதியில் அதிக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைத்தது. அதையடுத்து வேலூர் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூரில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக
 
அதிமுக தொண்டர் கொலை – வேலூரில் தேர்தல் நாளில் பதட்டம் !

வேலூரில் அதிமுக தொண்டர் ஒருவர் இன்று காலை கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேலூர் தொகுதியில் அதிக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைத்தது. அதையடுத்து வேலூர் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூரில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் வேலூரில் அதிமுக தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. வேலூரில் உள்ள சேண்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மாட்டு வண்டித் தொழிலாளி ஆவார். அதிமுக-வில் பெரிதும் ஈடுபாடு கொண்ட இவர் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார்.

இன்று காலை, சேண்பாக்கம் தேவாலயம் அருகே சேகர் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த சில மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த சுத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களால் சேகரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது முன்பகைக் காரணமாக நடந்த கொலையா அல்லது கட்சி விரோதம் சார்பாக நடந்த கொலையா எனப் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News