×

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இறந்தவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அங்குள்ள கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதன் 100-வது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். நாடு முழுவதும்
 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இறந்தவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அங்குள்ள கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதன் 100-வது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் இந்த ஆணையம் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவரான கிளாஸ்டன் என்பவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வரும் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவருக்கு சம்மன் அனுப்பியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News