×

உதயநிதிக்கு முக்கிய பதவி.. இன்று பதவியேற்பு.. களை கட்டும் அண்ணா அறிவாலயம்

Udyanithi Stalin – திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று திமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த உதயநிதி கருணாநிதியின் மறைவுக்கு பின் அரசியலிலும் களம் இறங்கினார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிக்ளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலின் போது திமுக சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக வெற்றி பெற்றதற்கு அவரின் பிரச்சாரமும் ஒரு காரணம் எனவும், அவருக்கு முக்கிய
 
உதயநிதிக்கு முக்கிய பதவி.. இன்று பதவியேற்பு.. களை கட்டும் அண்ணா அறிவாலயம்

Udyanithi Stalin – திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று திமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.

சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த உதயநிதி கருணாநிதியின் மறைவுக்கு பின் அரசியலிலும் களம் இறங்கினார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிக்ளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலின் போது திமுக சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக வெற்றி பெற்றதற்கு அவரின் பிரச்சாரமும் ஒரு காரணம் எனவும், அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட வேண்டும் என திமுகவில் தொண்டர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை கோரிக்கை வைத்தனர்.

உதயநிதிக்கு முக்கிய பதவி.. இன்று பதவியேற்பு.. களை கட்டும் அண்ணா அறிவாலயம்

இந்நிலையில், ஸ்டாலின் வகித்து வந்த இளைஞர் அணி செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட இருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது. அந்தப்பதவியில் இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனும் சமீபத்தில் ராஜீனாமா செய்தார்.

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று அவருக்கு பதவி அளிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, அண்ணா அறிவாலயம் இன்று களை கட்டியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News