×

அமெரிக்கா செல்ல தயாராக உள்ளோம், ஆனால் ரோடு இல்லை: ஆர்.பி.உதயகுமாரின் அடுத்த அதிரடி பேச்சு!

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் விதமாக சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். இந்த சைக்கிள் பேரணி திருவண்ணாமலையில் மூன்று நாளாக நடைபெற்றது. மேலும் இதில் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த சைக்கிள் பேரணிக்கு பின்னர் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 10000 கிலோமீட்டரில் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லலாம். அப்போ, அண்ணே அமெரிக்கா போவாமான்னு கேட்டுவிடாதீர்கள். எனெனில் அமெரிக்காவுக்கு செல்ல ரோடு இல்லை. ரோடு இருந்தால் நாம்
 
அமெரிக்கா செல்ல தயாராக உள்ளோம், ஆனால் ரோடு இல்லை: ஆர்.பி.உதயகுமாரின் அடுத்த அதிரடி பேச்சு!

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் விதமாக சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். இந்த சைக்கிள் பேரணி திருவண்ணாமலையில் மூன்று நாளாக நடைபெற்றது. மேலும் இதில் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த சைக்கிள் பேரணிக்கு பின்னர் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 10000 கிலோமீட்டரில் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லலாம். அப்போ, அண்ணே அமெரிக்கா போவாமான்னு கேட்டுவிடாதீர்கள். எனெனில் அமெரிக்காவுக்கு செல்ல ரோடு இல்லை. ரோடு இருந்தால் நாம் அமெரிக்காவுக்கு செல்லலாம்.

வேண்டுமென்றால் சைக்கிளை கப்பலில் ஏற்றி, அமெரிக்காவில் இறக்குவோம். அம்மாவின் அரசு குறித்து அமெரிக்காவில் சொல்வதற்கு முதல்வர் ஆணையிட்டால் திருவண்ணாமலையில் இருந்து அமெரிக்கா செல்ல தயாராக உள்ளோம் என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இதற்கு முன்னர் மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் 8 வழிச்சாலையை பூட்டுப் போட்டு பூட்டிவிடலாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News