×

இதோ வந்துவிட்டார் வைகோ மகன் – மதிமுகவில் வாரிசு அரசியல் !

மதிமுகவில் வைகோவின் மகனான துரை வையாபுரியை முன்னிலைப் படுத்தும் வேலைகளை வைகோ தொடங்கி விட்டதை உறுதிப்படுத்தும் விதமாக சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. திமுகவில் தலைவர் கலைஞர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதாக குற்றச்சாட்டை வைத்தார் வைகோ. இதனால் வைகோ தன்னை சதி செய்து கொலை செய்யப்பார்க்கிறார் என சொல்லி வைகோவை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர். வெளியே சென்ற வைகோ மதிமுக-வை உருவாக்கினார். கணிசமான அளவுக்கு அவர் பின்னால் நிர்வாகிகள் சென்றனர். பெரிய சக்தியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வைகோ
 
இதோ வந்துவிட்டார் வைகோ மகன் – மதிமுகவில் வாரிசு அரசியல் !

மதிமுகவில் வைகோவின் மகனான துரை வையாபுரியை முன்னிலைப் படுத்தும் வேலைகளை வைகோ தொடங்கி விட்டதை உறுதிப்படுத்தும் விதமாக சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

திமுகவில் தலைவர் கலைஞர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதாக குற்றச்சாட்டை வைத்தார் வைகோ. இதனால் வைகோ தன்னை சதி செய்து கொலை செய்யப்பார்க்கிறார் என சொல்லி வைகோவை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர். வெளியே சென்ற வைகோ மதிமுக-வை உருவாக்கினார். கணிசமான அளவுக்கு அவர் பின்னால் நிர்வாகிகள் சென்றனர்.

பெரிய சக்தியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வைகோ மாறி மாறி வைத்த கூட்டணிகளால் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல ஆனார். ஆனாலும் ஸ்டெர்லைட், நியுட்ரினோ, ஈழம் தொடர்பான பொதுப் பிரச்சனைகளில் அவரது குரலையும் செயல்பாட்டையும் யாரும் குறை சொல்ல முடியாது. இந்நிலையில் தமிழகத்தில் எல்லாக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் ஊடுருவிவிட்ட நிலையில் தங்கள் கட்சியில் மட்டுமே அது இல்லை என காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டிருந்த மதிமுக, இப்போது காலரை இறக்கிவிட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.

ஆம் வைகோவின் மகனான துரை வையாபுரிக்குக் கட்சியில் முக்கிய பதவியினைக் கொடுப்பதற்கான வேலைகளில் வைகோ இறங்கியிருக்கிறார். சமீப காலமாக கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டுகிறார் துரை. அதுமட்டுமில்லாமல் மதிமுக சார்பில் 2020 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட காலண்டரில் வைகோ, அவரது தாயார் மற்றும் அவரது மகன் துரை புகைப்படம் ஆகியவை இடம்பெற்றுள்ளதோடு, துரை புகைப்படத்துக்கு மேலே எதிர்காலம் எனவும் எழுதப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டில் துரை மதிமுகவில் முக்கியப் பதவி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News