×

விஜய் – மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

திமுக தலைவர் ஸ்டாலினும், நடிகர் விஜயும் சந்தித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Actor Vijay met stalin in wedding function – நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆயுதபூஜைக்கு பின் துவங்கவுள்ளது. இந்நிலையில், விஜயும், திமுக தலைவர் ஸ்டாலினும் திடீரென சந்தித்துக் கொண்டனர். கலைஞரின் மகளான செல்வியின் பேத்தி ஓவியாவிற்கு நிச்சயதார்த்த விழா நடந்தது. இதற்கா பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு
 
விஜய் – மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
திமுக தலைவர் ஸ்டாலினும், நடிகர் விஜயும் சந்தித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Vijay met stalin in wedding function – நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆயுதபூஜைக்கு பின் துவங்கவுள்ளது.

இந்நிலையில், விஜயும், திமுக தலைவர் ஸ்டாலினும் திடீரென சந்தித்துக் கொண்டனர். கலைஞரின் மகளான செல்வியின் பேத்தி ஓவியாவிற்கு நிச்சயதார்த்த விழா நடந்தது. இதற்கா பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் , துரைமுருகன், வைரமுத்து உள்ளிட பலரும் கலந்து கொண்டனர்.

விஜய் பாடும் ‘வெறித்தனம்’ பாடல் புரமோ வீடியோ – பிகில் அப்டேட்

இந்த விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார். அப்போது, அவரை மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கை குலுக்கி நலம் விசாரித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

விஜய் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டாலினுடனான அவரின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் – மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

From around the web

Trending Videos

Tamilnadu News