×

பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார்.. ஆனால் பேச மாட்டார்..

Vijayakanth : நாடாளுமன்ற தேர்தலுக்கு தேமுதிக சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேச மாட்டார் என அவரின் மைத்துனர் சதீஷ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ளது. வழக்கமாக தேர்தல் எனில் பிரச்சார வேனில் விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் செய்வார். அவரை பார்ப்பதற்காகவே மக்களும் கூடுவர். ஆனால், கடந்த 3 வருடங்களாகவே விஜயகாந்த் உடல் நலக்குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்கா சென்று சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். ஆனால், அதன்பின்னும் அவர் பொதுவெளியில் செய்தியாளர்களிடமோ
 
பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார்.. ஆனால் பேச மாட்டார்..

Vijayakanth : நாடாளுமன்ற தேர்தலுக்கு தேமுதிக சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேச மாட்டார் என அவரின் மைத்துனர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ளது. வழக்கமாக தேர்தல் எனில் பிரச்சார வேனில் விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் செய்வார். அவரை பார்ப்பதற்காகவே மக்களும் கூடுவர். ஆனால், கடந்த 3 வருடங்களாகவே விஜயகாந்த் உடல் நலக்குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்கா சென்று சிகிச்சையும் எடுத்துக்கொண்டார்.

ஆனால், அதன்பின்னும் அவர் பொதுவெளியில் செய்தியாளர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ பேசுவதில்லை. தேமுதிகவின் குரலாக பிரேமலதாவும், சுதீஷுமே பேசி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவாரா மாட்டாரா என்கிற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ் “விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். எனவே, தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்வார். ஆனால், அவர் பேச மாட்டார். அவர் வந்தாலே போதும். தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News