×

விஜய் அப்பா மீது முதல்வருக்கு கோபமா? நோஸ் கட் செய்தது ஏன்?

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கான மானியம் வழங்கும் நிகழ்வின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரனை நோஸ் கட் செய்ததாக கூறப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 149 படங்களுக்கு தலா 7 லட்சம் அரசு மானியத்தை நேற்று வழங்கினார். இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரனுக்கும் அந்த மானியம்
 
விஜய் அப்பா மீது முதல்வருக்கு கோபமா? நோஸ் கட் செய்தது ஏன்?

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கான மானியம் வழங்கும் நிகழ்வின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரனை நோஸ் கட் செய்ததாக கூறப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 149 படங்களுக்கு தலா 7 லட்சம் அரசு மானியத்தை நேற்று வழங்கினார். இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரனுக்கும் அந்த மானியம் வழங்கப்பட்டது.

முதல் நபராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து அந்த மானியத்தை வாங்கிய சந்திரசேகரன், முதல்வரிடம் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதனை கவனிக்காதது போல அடுத்த நபரை அழைத்ததாக பேசப்படுகிறது. இது முதல்வரிடம் பேச முயன்ற சந்திரசேகரனுக்கு நோஸ் கட்டாக அமைந்தது. விஜய் அப்பா நடித்திருக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் மீது இருக்கும் கோபத்தை தான் முதல்வர் அவ்வாறு வெளிக்காட்டினார் என கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News