×

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகியத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருக்கட்சிகளுக்கு இடையிலான இரு முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அரசியல் பணிகளில் அதிகமாக ஈடுபடாத தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது விக்கிரவாண்டிஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக
 
விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகியத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருக்கட்சிகளுக்கு இடையிலான இரு முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அரசியல் பணிகளில் அதிகமாக ஈடுபடாத தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது விக்கிரவாண்டிஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் விஜயகாந்த் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவாரா என்பது சந்தேகமே. ஆனாலும் விஜயகாந்த் முகத்தைப் பார்ப்பதில் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் திருப்பூரில்  நடந்த தேமுதிக மாநாட்டில் கூட விஜயகாந்த் கலந்துகொண்டு ஒரு சில வார்த்தைகளையேப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News