×

இப்ப பாஜக என்ன செய்வாங்க? – சூர்யாவை ஆதரித்த ரஜினிகாந்த்

Rajinikanth support suriya – புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்திற்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சூர்யா ‘30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கையில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகளை படிக்க முடியுமா? அனைத்து துறைகளிலும் நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்விகளின் நிலை? பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல், நுழைவுத் தேர்வில் மட்டுமே அரசு ஆர்வம்
 
இப்ப பாஜக என்ன செய்வாங்க? – சூர்யாவை ஆதரித்த ரஜினிகாந்த்

Rajinikanth support suriya – புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்திற்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சூர்யா ‘30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கையில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகளை படிக்க முடியுமா? அனைத்து துறைகளிலும் நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்விகளின் நிலை? பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல், நுழைவுத் தேர்வில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டுவது ஏன்?” என பல கேள்விகளை அவர் எழுப்பினார்.

சூர்யாவின் கருத்திற்கு ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் பலரும் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு #StandwithSuriya என்கிற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். மேலும், கமல்ஹாசனும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

இப்ப பாஜக என்ன செய்வாங்க? – சூர்யாவை ஆதரித்த ரஜினிகாந்த்

இந்நிலையில், நேற்று சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி ‘ ரஜினி சொன்னால் மோடி கேட்பார்கள் என சொல்கிறார்கள். ஆனால், சூர்யா பேசியது அவர்களுக்கு கேட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதை நான் ஆமோதிக்கிறேன். மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே அவர் பார்த்தவர்” என ரஜினி தெரிவித்துள்ளார்.

பொதுவாக ரஜினி பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதில்லை. மோடியை பாராட்டியே எப்போதும் பேசுவார். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது சரிதான் என தற்போது அவர் பேசியிருப்பது அவரிடமிருந்து மாற்றத்தை பார்ப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதோடு, சூர்யாவுக்கு ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துவிடதால், சூர்யாவை கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா, தமிழிசை ஆகியோரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News