×

படுதோல்வியை சந்தித்த பாமக, தேமுதிக – அரசியல் எதிர்காலம் என்ன?

PMK and DMDK – தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாமகவும், தேமுதிகவும் வெற்றி பெறாமல் போனதால் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம், தமாகா, புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாமக 7 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மற்ற கட்சிகள் தலா ஒரு தொகுதி என களம் இறங்கின. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதிமுக
 
படுதோல்வியை சந்தித்த பாமக, தேமுதிக – அரசியல் எதிர்காலம் என்ன?

PMK and DMDK – தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாமகவும், தேமுதிகவும் வெற்றி பெறாமல் போனதால் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம், தமாகா, புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாமக 7 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மற்ற கட்சிகள் தலா ஒரு தொகுதி என களம் இறங்கின.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதிமுக மட்டுமே ஒரு தொகுதி(தேனி)யில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்துள்ளன. குறிப்பாக பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் சந்தித்த தோல்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

படுதோல்வியை சந்தித்த பாமக, தேமுதிக – அரசியல் எதிர்காலம் என்ன?

தேமுதிக போட்டியிட்ட திருச்சி, வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் 3,21,794 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று அதாவது 4 லட்சம் வித்தியாசத்தில் சுதீஷை தோற்கடித்துள்ளார்.

படுதோல்வியை சந்தித்த பாமக, தேமுதிக – அரசியல் எதிர்காலம் என்ன?

அதேபோல் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். தர்மபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் 4,88,150 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதே தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் குமார் 5,51,451 வாக்குகள் பெற்று அன்புமணியை தோற்கடித்துள்ளார். அதேபோல், மற்ற பாமக வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இந்த இரு கட்சிகளும் இதற்கு முன் நல்ல வாக்கு வங்கிகளை வைத்திருந்த கட்சிகள் ஆகும். ஆனால், தவறான அரசியல் கொள்கை மற்றும் கூட்டணி முடிவுகளால் இந்த இரு கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். எனவே, இக்கட்சிகளின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News