×

5 மணி வரை எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு? – அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகத்தில் மாலை 5 மணி வரை எத்தனை சதவீத வாக்குப்பதிவு என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் மதியம் 1 ஒரு மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. அதிக பட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56 சதவீதம் பதிவாகியிருந்தது. அதேபோல், 18 தொகுதிகளுக்காக சட்டப்பேரவை இடைத்தேர்தலில்
 
5 மணி வரை எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு? – அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகத்தில் மாலை 5 மணி வரை எத்தனை சதவீத வாக்குப்பதிவு என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மதியம் 1 ஒரு மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. அதிக பட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56 சதவீதம் பதிவாகியிருந்தது. அதேபோல், 18 தொகுதிகளுக்காக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 42.92 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

5 மணி வரை எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு? – அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்நிலையில், தற்போது ஆறு மணியை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், மாலை 5 மணி வரை 63.73 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதேபோல், 18 தொகுதிகளுக்காக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 67.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக சாஹீ தெரிவித்துள்ளார்.

எனவே, 6 மணிவரை 72 – 75 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News