×

முதல்வருக்கு எப்போது பாராட்டு விழா ? – ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி !

வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் எப்போது பாராட்டு விழா வைக்கப்போகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதலீடுகளைக் கவர்வதற்காக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அவருடன் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றனர். மேலும் அவர்களை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகளுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிஷியஸ் நாட்டிற்கும், அமைச்சர் நிலோபல் கஃபில் ரஷ்யாவிற்கும் சுற்றுப்பயணம் சென்றனர். இதனை
 
முதல்வருக்கு எப்போது பாராட்டு விழா ? – ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி !

வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் எப்போது பாராட்டு விழா வைக்கப்போகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதலீடுகளைக் கவர்வதற்காக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அவருடன் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றனர். மேலும் அவர்களை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகளுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிஷியஸ் நாட்டிற்கும், அமைச்சர் நிலோபல் கஃபில் ரஷ்யாவிற்கும் சுற்றுப்பயணம் சென்றனர்.

இதனை விமர்சித்துப் பேசிய திமுக தலைவர் ‘ஏற்கனவே நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு பெறப்பட்டது. இப்போது கொண்டு வரும் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? அப்படி வெளியிட்டால் முதல்வருக்கு நானே பாராட்டு விழா நடத்துவேன்’ எனக் கூறினார்.

இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து திரும்பிய முதல்வர் ‘‘8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ‘ ஸ்டாலின் எப்போது முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்த இருக்கிறார். அவர் சொன்னதை செய்வார் என்று நம்புகிறேன். சீக்கிரம் நடத்தினால் அது அரசியல் நாகரீகமாக இருக்கும். அப்படி நடத்தினால் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் இமேஜும் உயரும்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News