×

யாருக்கு அதிக தொகுதி? யார் பிரதமர்? – எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வே

Opinion poll on lok sabha election – நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தொகுதி அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் எந்த கட்சி அதிக இடம் கிடைக்கும் என்பதும், யார் பிரதமராக வருவார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், பிரபல புதியதலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் தமிழகம் முழுவதும் ஒரு சர்வே நடத்தியுள்ளது. அதில், தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பெறும் என்பதும், ராகுலுக்கு அதிக
 
யாருக்கு அதிக தொகுதி? யார் பிரதமர்? – எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வே

Opinion poll on lok sabha election – நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தொகுதி அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் எந்த கட்சி அதிக இடம் கிடைக்கும் என்பதும், யார் பிரதமராக வருவார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

யாருக்கு அதிக தொகுதி? யார் பிரதமர்? – எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வே

இந்நிலையில், பிரபல புதியதலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் தமிழகம் முழுவதும் ஒரு சர்வே நடத்தியுள்ளது. அதில், தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பெறும் என்பதும், ராகுலுக்கு அதிக ஆதரவு இருப்பதும், மோடிக்கு அதிக எதிர்ப்பும் இருப்பதும் தெரியவந்துள்ளது.

5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி அதிமுக கூட்டணிக்கு 6லிருந்து 8 இடங்களும், திமுக கூட்டணிக்கு 31 லிருந்து 33 இடங்களும் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.

எந்த கூட்டணிக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு சதவீதம் வாரியாக பின்வருமாறு:

அதிமுக – 27.07
திமுக – 41.92
அமமுக – 4.71
மாநீம – 5.68
நாம் தமிழர் – 4.19
நோட்டா – 5.74 என சதவீதம் பேர் பதிலளித்தனர். மேலும், தெரியாது என 10.68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

யாருக்கு அதிக தொகுதி? யார் பிரதமர்? – எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வே

அதேபோல், மோடி அரசு மீண்டும் வர வேண்டுமா அல்லது புதிய அரசு அமைய வேண்டுமா என்கிற கேள்விக்கு புதிய அரசு என 70.02 சதவீதம் பேரும் , மோடி அரசு என 21.60 சதவீதமும் பதிலளித்தனர். 1.85 சதவீதம் பேர் வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

தமிழகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த அரசியல் கட்சித் தலைவர் யார் என்ற கேள்விக்கு ஸ்டாலின் என 31.01 சதவீதம் பேரும், எடப்பாடி பழனிச்சாமி என 9.66 சதவீதம் பேரும் பதிலளித்தனர். மற்றவை சதவீதப்படி பின்வருமாறு:

ஓபிஎஸ் – 6.16
சீமான் – 5.54
கமல்ஹாசன் – 4.65
விஜயகாந்த் – 4.14
அன்புமணி – 3.82
தினகரன் – 3.78
திருமாவளவன் – 1.17
தமிழிசை சவுந்தரராஜன் – 0.64 சதவீதம் பேரும் பதிலளித்தனர்.

மேலும், இந்தியாவின் அடுத்த பிரதமாராக ராகுல் காந்தி வரவேண்டும் என 53.20 சதவீதம் பேரும் மோடி என 22.43 சதவீதம் பேரும் பதிலளித்தனர். இந்த மக்களவை தேர்தலில் வேலையின்மை பிரச்சனை முக்கியத்துவம் பெறும் என 36.11 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேபோல், மோடியின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது என பெருவாரியான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படி தொடர்ந்து அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக அதிக இடங்களை பெறும் என கூறுவது திமுக தரப்புக்கு மகிழ்ச்சியையும், அதிமுக தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News