×

ஏன்டா நாய்ங்களா? செய்தியாளர்களை மட்டமாக பேசிய ராமதாஸ்…

PMK Ramadas – பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை தரக்குறைவாக விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறில் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ஏன் மரம் வெட்டினீர்கள்? இன்னும் எனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ராமதாஸ் என்றாலே மரம் வெட்டி என இமேஜை உருவாக்கி விட்டார்கள். கல்கத்தாவில் இருந்து வரும் ஒரு பத்திரிக்கையின் நிருபன் சமீபத்தில் அதே கேள்வியை
 
ஏன்டா நாய்ங்களா? செய்தியாளர்களை மட்டமாக பேசிய ராமதாஸ்…

PMK Ramadas – பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை தரக்குறைவாக விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறில் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஏன் மரம் வெட்டினீர்கள்? இன்னும் எனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ராமதாஸ் என்றாலே மரம் வெட்டி என இமேஜை உருவாக்கி விட்டார்கள். கல்கத்தாவில் இருந்து வரும் ஒரு பத்திரிக்கையின் நிருபன் சமீபத்தில் அதே கேள்வியை கேட்டான்.

அதற்கு நான் ‘இந்த கேள்விக்கு நான் 100 முறை பதில் கூறிவிட்டேன். இனிமேல் எதாவது போராட்டம் பண்ணா மரத்தை வெட்ட மாட்டோம். இப்படி கேள்வி கேட்குற ஆளை வெட்டி போட்டுட்டு அப்புறம் போராட்டம் பண்றோம்னு சொன்னேன்”.

ஏன்டா நாய்ங்களா. இன்னும் அசிங்கமா திட்டணும். நான் வச்ச மரத்தை வந்து பாருங்கடா. ஒரு லட்சம் பரிசு தரேன்னு சொன்னேன். ஒரு நாயும் வந்து பாக்கல’ என அவர் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசினார்.

ராமதாஸ் இப்படி பேசியிருப்பது செய்தியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News