×

வேலூரில் திமுக திணறியது ஏன்? அதிமுக அதிக வாக்குகள் பெற்றது எப்படி?

Reason behind dmk and admk votes in velur – வேலூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவு அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்களின் எண்ணங்களை மறுபரீசலனை செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. ஏற்கனவே நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனியை தவிர மற்ற அனைத்து இடங்களில் திமுக வெற்றி பெற்று அதிமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி வேலூர் தொகுதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் கடந்த 5ம் தேதி நடத்தப்பட்டது. கடந்த தேர்தலில் பல தொகுதிகளிலும்
 
வேலூரில் திமுக திணறியது ஏன்? அதிமுக அதிக வாக்குகள் பெற்றது எப்படி?

Reason behind dmk and admk votes in velur – வேலூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவு அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்களின் எண்ணங்களை மறுபரீசலனை செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.

ஏற்கனவே நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனியை தவிர மற்ற அனைத்து இடங்களில் திமுக வெற்றி பெற்று அதிமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி வேலூர் தொகுதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் கடந்த 5ம் தேதி நடத்தப்பட்டது.

கடந்த தேர்தலில் பல தொகுதிகளிலும் 6 லட்சம், 4 லட்சம், 3 லட்சம் என்கிற வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக, இந்த முறை கடைசி வரை போராடி, திக்கி திணறி வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.

வேலூரில் திமுக திணறியது ஏன்? அதிமுக அதிக வாக்குகள் பெற்றது எப்படி?

ஏற்கனவே பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், வேலூர் தொகுதி தேர்தல் அதிமுக – திமுக அல்லது எடப்பாடி பழனிச்சாமி – ஸ்டாலின் ஆகியோருக்கு இடையேயான கௌரவப் போட்டியாகவே கருதப்பட்டது. வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என களம் இறங்கிய அதிமுக வழக்காமாக திமுகவிற்கு செல்லும் இஸ்லாமியர்கள் இந்த முறை அதிமுகவிற்கு விழ வேண்டும் என கங்கணம் கட்டி வேலை பார்த்தனர்.

பாஜவுடன் கூட்டணி அமைத்ததால்தான் படுதோல்வியை சந்தித்தோம் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிச்சமி தரப்பு, இந்த முறை வேலூரில் பாஜக பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் வேலூரில் பிரச்சாரத்திற்கு வராமல் பார்த்துக் கொண்டனர். இதன் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என அதிமுக நம்பியது. அதற்கு பலனும் கிடைத்தது.

வேலூரில் திமுக திணறியது ஏன்? அதிமுக அதிக வாக்குகள் பெற்றது எப்படி?

நாடாளுமன்றத்தில் முத்தாலக் சட்டத்தை ஆதரித்து ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் பேசியது முஸ்லீம்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதையும் அதிமுக அமைச்சர்கள் சரி செய்தனர். அதிமுக அமைச்சர்கள் பலர் வேலூரில் முகாமிட்டு இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து இந்த முறை இவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என மசூதி வழியாக வாய் மொழி உத்தரவை பிறப்பிக்க வேண்டாம் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. எனவேதான், இந்த முறை இஸ்லாமியர்கள் வாக்குகள் கணிசமாக அதிமுகவிற்கு சென்றது.

ஆனால், தேர்தல் நடந்த 5ம் தேதிதான் காஷ்மீருக்கன சிறப்பு சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு -காஷ்மீர் மூன்றாக பிரிக்கப்படுவதாகவும் அமித்ஷா அறிவித்தார். இதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தல் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற மனநிலை உருவானது. அதோடு, திமுக தரப்பில் அப்படி வாய் மொழி பிரச்சாரமும் செய்யப்பட்டது. எனவேதான், மதியம் ஒரு மணி வரை 29.4 சதவீதமாக இருந்த வாக்குபதிவு அடுத்த 4 மணி நேரத்தில் 72 சதவீதமாக உயர்ந்தது. அதில், பெரும்பாலானோர் திமுகவிற்கு வாக்களித்திருப்பார்கள் என்றே கருதப்படுகிறது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் கணிசமான வாக்குகள் கதிர் ஆனந்த் பெற்றுள்ளார்.

வேலூரில் திமுக திணறியது ஏன்? அதிமுக அதிக வாக்குகள் பெற்றது எப்படி?

மற்ற தொகுதிகளை போலவே வேலூர் தொகுதியிலும் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை. கடுமையான இழுபறிக்கு பின்னரே கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். வேலூரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை அதிமுக அறுவடை செய்ய தொடங்கியுள்ளது.

எனவே, வெற்றி பெற்று விட்டாலும் வேலூர் தேர்தல் முடிவு இழுபறி மற்றும் அதிமுக பெற்ற வாக்குகள் குறித்து திமுக தலைமை தீவிரமாக ஆராயவேண்டும் என்பதே திமுக தொண்டர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News