×

பிறந்தநாளில் தந்தைக்கு சிலை வைப்பது ஏன் ? – கமல்ஹாசன் விளக்கம் !

தனது பிறந்தநாளன்று தந்தைக்கு சிலை வைப்பது ஏன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் விளக்கம் அளித்துள்ளார். கலைத்தாயின் தலைமகனான கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதிதான் அவரது தந்தை சீனிவாசனின் நினைவு நாளும் ஆகும். இந்நிலையில் இன்று கமலின் சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தைக்கு சிலை அமைக்க திறக்கவுள்ளார். இதற்காக கமல்ஹாசன் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை
 
பிறந்தநாளில் தந்தைக்கு சிலை வைப்பது ஏன் ? – கமல்ஹாசன் விளக்கம் !

தனது பிறந்தநாளன்று தந்தைக்கு சிலை வைப்பது ஏன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் விளக்கம் அளித்துள்ளார்.

கலைத்தாயின் தலைமகனான கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதிதான் அவரது தந்தை சீனிவாசனின் நினைவு நாளும் ஆகும். இந்நிலையில் இன்று   கமலின் சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தைக்கு சிலை அமைக்க திறக்கவுள்ளார்.

இதற்காக கமல்ஹாசன் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை மதுரை புறப்பட்டுச் சென்றார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ’ எனது தந்தை உயிருடன் இருந்த போது அவருக்கு சிலை வைக்க வேண்டுமென விரும்பவில்லை. நாங்கள் செய்யும் பணியைதான் அவர் விரும்பினார். அவருடைய ரசிகன், மாணவன் என்ற முறையில் சிலை வைக்க விரும்பினேன். எனது கட்சியினருமே அதையேதான் விரும்பினார். அதனால்தான் சிலை திறக்க இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் அந்த இடத்தில் திறன்வளர் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க இருக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News