×

கொடிக்கம்பம் விழுந்து விபத்துக்குள்ளான பெண் –  இடது கால் நீக்கம் !

கோவையில் அதிமுக வின் கொடிக்கம்பம் விழுந்து விபத்துள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் இடதுகால் நீக்கப்ப்ட்டுள்ளது. சமீபத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது கட்சி பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இது போல் மீண்டும் ஒரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது. கோவையில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அவினாசி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடி கம்பம், அச்சாலையில் ஒரு பெண் பைக்கில்
 
கொடிக்கம்பம் விழுந்து விபத்துக்குள்ளான பெண் –  இடது கால் நீக்கம் !

கோவையில் அதிமுக வின் கொடிக்கம்பம் விழுந்து விபத்துள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் இடதுகால் நீக்கப்ப்ட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது கட்சி பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இது போல் மீண்டும் ஒரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவையில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அவினாசி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடி கம்பம், அச்சாலையில் ஒரு பெண் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது சாலையில் விழுந்தது. இதனை கண்ட அப்பெண் பைக்கை நிறுத்த முயற்சித்து தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அவர் மேலே ஏறியதில் இரு கால்களும் நசுங்கின. மேலும் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததில் மற்றோரு இளைஞரும் காயமடைந்தார். இந்நிலையில் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அனுராதா. இந்நிலையில் அவரது கால்கள் இரண்டும் மீட்கமுடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் இடதுகாலை நேற்று மருத்துவரகள் அகற்றியுள்ளனர். மேலும் வலதுகாலையும் நீக்கவேண்டும் எனவும் ஆனால் அதற்கு 10 நாட்கள் ஆகுமெனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அனுராதா இன்னும் மயக்கம் தெளியவில்லை என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News