×

எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா?: அமைச்சர் பகிரங்க மிரட்டல்!

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுகவை ரஜினி விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா? என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். திமுக தலைவர் கருணாநிதி திரைத்துறையினர் சார்பாக அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய ரஜினிகாந்த், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என்றார். மேலும் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் முதல்வர்
 
எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா?: அமைச்சர் பகிரங்க மிரட்டல்!

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுகவை ரஜினி விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா? என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

திமுக தலைவர் கருணாநிதி திரைத்துறையினர் சார்பாக அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய ரஜினிகாந்த், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என்றார்.

மேலும் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளாததை விமர்சித்த ரஜினிகாந்த், நீங்கள் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா என கேட்டார் இது அதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இதுபோன்று அரசியல் பேசுவது நல்லதல்ல. அரசியல் வரலாறே தெரியாமல் வாய் புளித்தது, மாங்காய் புளித்தது என்று பேசியது ரஜினியின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

இதுபோல் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இருந்ததா. அப்போது ஓடி ஒளிந்து கொண்டார் ரஜினி. அவர்கள் முன்னால் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என பகிரங்கமாக மிரட்டினார் அமைச்சர் ஜெயகுமார்.

From around the web

Trending Videos

Tamilnadu News