×

சென்னை 2 சிங்கப்பூர்: திரைவிமர்சனம்

ஜிப்ரான் இசை மற்றும் தயாரிப்பில் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம் சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஹீரோ ஹரிஷ் தாயின் பேச்சை கூட கேட்காமல், ஒரு தயாரிப்பாளரை நம்பி பத்து மாதங்கள் வேலை செய்கிறார். ஆனால் திடீரென அந்த தயாரிப்பாளர் கைவிட, சோர்ந்து போயிருக்கும் ஹரிஷுக்கு நண்பர் ஒருவர் கைகொடுக்கின்றார். சிங்கப்பூரில் தனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளர் இருப்பதாகவும், அவரை போய்
 
சென்னை 2 சிங்கப்பூர்: திரைவிமர்சனம்

சென்னை 2 சிங்கப்பூர்: திரைவிமர்சனம்ஜிப்ரான் இசை மற்றும் தயாரிப்பில் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஹீரோ ஹரிஷ் தாயின் பேச்சை கூட கேட்காமல், ஒரு தயாரிப்பாளரை நம்பி பத்து மாதங்கள் வேலை செய்கிறார். ஆனால் திடீரென அந்த தயாரிப்பாளர் கைவிட, சோர்ந்து போயிருக்கும் ஹரிஷுக்கு நண்பர் ஒருவர் கைகொடுக்கின்றார்.

சிங்கப்பூரில் தனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளர் இருப்பதாகவும், அவரை போய் பார் என்றும் செலவுக்கு பணம் ஏற்பாடு செய்து அனுப்புகிறார். ஆனால் சிங்கப்பூரில் ஹரிஷ் காலடி எடுத்து வைத்த நேரம், அந்த தயாரிப்பாளருக்கு விபத்து ஏற்படுகிறது.

இந்த நிலையில் கையில் இருந்த பணம், பாஸ்போர்ட் ஆகியவற்றை தொலைத்துவிட்டு நிர்கதியாய் இருக்கும் ஹரிஷூக்கு விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வானம்பாடி என்பவர் நண்பராகிறார்

இருவரும் சேர்ந்து விளம்பர படம் எடுக்கும் ஒரு தயாரிப்பாளரை சந்திக்கின்றனர். ஆனால் அவரே ஹரிஷ் கூறிய ஆக்சன் கதை வேண்டாம் என்றும் ஒரு நல்ல காதல் கதையுடன் வாருங்கள் என்றும் கூறுகிறார். இந்த நேரத்தில் ரோஷினி என்ற பெண்ணை சந்திக்கும் ஹரிஷ், அவர் மூலம் ஒரு காதல் கதை கிடைக்குமா? என்ற எண்ணத்தில் பின் தொடர்கிறார். அதன்பின்னர் நடக்கும் வேடிக்கை வினோதங்கள், காதல், சோகம், காமெடி என எல்லாம் கலந்து சுபமாக முடிகிறது படம்

புதுமுகம் கோகுல் ஆனந்த், ஹரிஷ் கேரக்டரில் பின்னி பிடலெடுத்துள்ளார். முகத்தை பார்க்கும்போது தமிழனுக்குள்ள அடையாளம் சிறிதுகூட இல்லை. ஆனால் தமிழ் சூப்பராக உச்சரிக்கின்றார். விரக்தி, காதல், சோகம், காமெடி என புகுந்து விளையாடி ஒரு நல்ல நடிகர் என்ற அந்தஸ்தை பெறுகிறார்

ரோஷினியாக நடித்திருக்கும் அஞ்சுகுரியன், ஒரு புற்றுநோயாளியாக இன்னும் சில மாதங்களில் இறந்துவிடும் பரிதாபத்துக்குரிய கேரக்டராக அறிமுகமாகிறார். ஆனால் ஹீரோ சந்திப்பு நடந்துவிடும் துள்ளியெழுகிறது அவரது கேரக்டர். தமிழ் திரையுலகிற்கு ஒரு நல்ல ஹீரோயினி கிடைத்துவிட்டார். முகவெட்டு கிட்டத்தட்ட நஸ்ரியா போன்றே உள்ளதும் ஒரு சிறப்பு

ஹீரோ நண்பராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலசந்திரன் தமிழ் திரையுலகில் ஒரு வித்தியாசமான காமெடியாக வலம் வர வாய்ப்பு உள்ளது. மற்றபடி தயாரிப்பாளர் கேரக்டரில் நடித்திருக்கும் மைக்கெல் கிரிஸ், மற்றும் பாப்பா பலாஸ் ஆகியோர் வெறுப்பேற்றுகின்றனர்.

இயக்குனர் அப்பாஸ் அகமது முதல் பாதியை வித்தியாசமான கோணத்தில் திரைக்கதை அமைத்துள்ளார். மிகப்பெரிய பலம் வசனங்கள். ஒவ்வொரு இளைஞனுக்கு தன்னம்பிக்கையை தரும் வகையில் உள்ளது. ஆனால் இரண்டாம் பாதி முதல் பாதிக்கு நேரெதிராக உள்ளது. முதல் பாதியில் காமெடிக்கும் சீரியஸ் தனத்திற்கும் ஒரு வேறுபாடு இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் எது காமெடி எது சீரியஸ் என்றே தெரியவில்லை. படுநீளமான சுவாரஸ்மில்லாத கிளைமாக்ஸ் படத்தின் மிகப்பெரிய மைனஸ்

ஜிப்ரான் ஒரு தயாரிப்பாளராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார். பாடல்கள் அனைத்தும் மிக அருமை. பின்னணி இசை அதைவிட சூப்பர்

கேமிரா மற்றும் எடிட்டிங் மிக கச்சிதம். மொத்தத்தில் முதல் பாதிக்காகவும், இசைக்காகவும், ஒருமுறை பார்க்கலாம்.

2.25/5

From around the web

Trending Videos

Tamilnadu News