×

பட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்

Gangs of Madras Review – கேங்ஸ்டர் குரூப்பில் இருக்கும் தனது கணவனை கொன்றவர்களை பழிவாங்க ஒரு பெண் கேங்ஸ்டராக மாறுவதுதான் கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் ஒரு வரிக்கதை. இந்து பெண்ணான ஜெயா (பிரியங்கா ருத்) இஸ்லாம் மதத்தை சேர்ந்த இப்ராஹிமை (அசோக்) காதலிக்கிறார். இவர்களின் திருமனத்திற்கு ஜெயா வீட்டில் சம்மதம் கிடைக்காததால், இஸ்லாம் மதத்துக்கு மாறி இப்ராஹிமை ஜெயா திருமணம் செய்து கொள்கிறார். பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் வேலு
 
பட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்

Gangs of Madras Review – கேங்ஸ்டர் குரூப்பில் இருக்கும் தனது கணவனை கொன்றவர்களை பழிவாங்க ஒரு பெண் கேங்ஸ்டராக மாறுவதுதான் கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் ஒரு வரிக்கதை.

இந்து பெண்ணான ஜெயா (பிரியங்கா ருத்) இஸ்லாம் மதத்தை சேர்ந்த இப்ராஹிமை (அசோக்) காதலிக்கிறார். இவர்களின் திருமனத்திற்கு ஜெயா வீட்டில் சம்மதம் கிடைக்காததால், இஸ்லாம் மதத்துக்கு மாறி இப்ராஹிமை ஜெயா திருமணம் செய்து கொள்கிறார்.

பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் வேலு பிரபாகரனின் கேங்கில் இப்ராஹிம் வேலைக்கு சேர்கிறார். ஆனால், தொழில் போட்டியில் இப்ராஹிம் என்கவுண்டர் செய்யப்படுகிறார். இதற்கு வேலு பிரபாகரனும் உடைந்தையாய் இருக்கிறார்.

பட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்

இந்த விவகாரம் ஜெயாவுக்கு தெரிய வர அவரும் கேங்கஸ்டராக மாறி தனது கணவனி கொன்றவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதே மீதிக்கதை.

ஜெயாவாக நடித்துள்ள பிரியங்கா ருத்தின் நடிப்பு மிகவும் அருமை. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த பெண்ணும் கேங்ஸ்டராக நடித்ததில்லை. எனவே, வித்தியாசமான துணிச்சலான வேடம் அவருக்கு. எனவே, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார்.

கேங்ஸ்டர் படம் என்றால டேனியல் பாலாஜி இருப்பார். இப்படத்தில் இருக்கிறார். கணவனை கொன்றவர்களை பழிதீர்க்க பிரியங்கா ருத்திற்கு உதவும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அதேபோல், வேலுபிரகாரனும் நடிப்பில் மிரட்டியுள்ளார். அசோக், ஆடுகளம் நரேன் ஆகியோரின் நடிப்பும் அருமை.

பட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்

ஒரு கேங்ஸ்டர் திரில்லர் கதையை கையில் எடுத்து, அதற்கு சரியான திரைக்கதை அமைத்து படத்தை ரசிக்கும்படி இயக்கியுள்ளார் சி.வி.குமார். சென்னையில் செயல்படும் போதைமருந்து கும்பல் குறித்து பெரும் ஆராய்ச்சி செய்துள்ளார் போலும். படப்பிடிப்புக்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள இடங்களே அதற்கு சாட்சி. ஓரு பெண்ணை கேங்ஸ்டராக அவர் கற்பனை செய்தது, தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரின் கற்பனைக்கும் எட்டாத ஒன்று. இதற்காகவே அவரை பாராட்டலாம்.

ஹரி தவுசியா இசையமைப்பாளர் என்றாலும் சியாமலங்கனின் பின்ணனி இசை மிரட்டலாக அமைந்துள்ளது. அவரின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. கார்த்திக் குமாரின் ஒளிப்பதிவு அருமை. அதேபோல், ராதாகிருஷ்ணன் எடிட்டிங்கில் தோய்வில்லாமல் படம் விறுவிறுவென செல்கிறது.

பட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்

அதிக வன்முற இருப்பதால் இப்படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே 18 வயதுக்கு மேற்பட்டோர் இப்படத்தை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News