×

மெரிக்குரி: திரை விமர்சனம்

வசனமே இல்லாத ஒரு த்ரில் படத்தை இயக்குவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அந்த தைரியமான விஷயத்தை கையில் எடுத்துள்ள கார்த்திக் சுப்புராஜூக்கு ஒரு பாராட்டு வாய் பேச முடியாத, காது கேட்காத ஐந்து நண்பர்கள் ஒரு காட்டு பகுதிக்கு பிக்னிக் செல்கின்றனர். அதில் ஒருவர் பெண். அந்த பெண்ணிடம் நால்வரில் ஒருவன் தனது காதலை கூற அந்த பெண்ணும் காதலை ஏற்று கொள்கிறார். இந்த நிலையில் தங்கள் காதலை கொண்டாட இரவில் வெளியில் செல்லும் ஐந்து பேர்,
 
மெரிக்குரி: திரை விமர்சனம்

மெரிக்குரி: திரை விமர்சனம் வசனமே இல்லாத ஒரு த்ரில் படத்தை இயக்குவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அந்த தைரியமான விஷயத்தை கையில் எடுத்துள்ள கார்த்திக் சுப்புராஜூக்கு ஒரு பாராட்டு

வாய் பேச முடியாத, காது கேட்காத ஐந்து நண்பர்கள் ஒரு காட்டு பகுதிக்கு பிக்னிக் செல்கின்றனர். அதில் ஒருவர் பெண். அந்த பெண்ணிடம் நால்வரில் ஒருவன் தனது காதலை கூற அந்த பெண்ணும் காதலை ஏற்று கொள்கிறார். இந்த நிலையில் தங்கள் காதலை கொண்டாட இரவில் வெளியில் செல்லும் ஐந்து பேர், ஒரு விபத்தை சந்திக்கின்றனர். அந்த விபத்தில் சிக்குபவர் பிரபுதேவா. இந்த விபத்தினால் பிரபுதேவாவுக்கு என்ன ஆச்சு? அவர் யார்? இந்த விபத்தினால் ஐந்து நண்பர்கள் சந்தித்த விளைவுகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை

மெரிக்குரி: திரை விமர்சனம்

விளையாட்டு தனமாக சனந்த் ரெட்டி காரின் ஹெட்லைட்டையை ஆப் செய்து விடுகிறார். இதனால் காரை ஒட்டி வரும் அவரின் காதலியான இந்துஜா பதறி விடுகிறார். இந்த சமயத்தில் எதிர்பாரத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்து விடுகிறது. இதை சற்றும் எதிர்பாராத இந்துஜா காரை சட்டென திருப்பும் போது, பிரபுதேவாவின கையில் இருக்கும் நாய்ச்சங்கிலி இவா்களது காரில் மாட்டி விடுகிறது. காரில் மாட்டிக்கொண்டதை கவனிக்காமல் அவா்கள் காரை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். இதனால் கண்தெரியாத பிரபு தேவா கண்மண் தெரியாமல் பறக்கும் காரில் மாட்டிக்கொண்டு ரோட்டில் இழுத்துக்கொண்டு செல்லப்படுகிறார்.

மெரிக்குரி: திரை விமர்சனம்

அப்போது அவா்கள் சென்ற கார் திடீரென ஒரு வளைவில் மாட்டிக்கொள்கிறது. அந்த சமயத்தில் தான் காரில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பிரபுதேவாவைப் கவனிக்கிறார்கள். அவா் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து எப்படியாவது அவரை யார் கண்ணிலும் படாமல் கொண்டு போய் மலைப்பகுதியிலிருந்து கீழே உருண்டி விடுகிறார்கள். அப்படி தள்ளி விடும் போது நண்பா்களில் ஒருவரின் ஐபாட் தொலைந்து போகிறது. அந்த ஐபாட்டை வைத்து தங்களை கண்டுபிடித்து விடுவார்களே என்று பயந்து அதை தேடி செல்கிறார்கள். அப்படி தேடி போகும் போது கீழே பள்ளத்தில் தள்ளிய பிரபுதேவாவின் உடல் அங்கு கிடைக்கவில்லை. திரும்பி மலைப்பகுதிக்கு செல்லும் போது காரில் இருந்த இந்துஜாவை காணவில்லை.மெரிக்குரி: திரை விமர்சனம்

இந்துஜாவை தேடி செல்லும் போது அங்கு இருந்த மெர்குரி ஆலைக்குள் அவா் இருப்பது போலத் தெரிய வருகிறது. அதனால் இந்துஜாவை தேடி மெர்குரி ஆலைக்குள் செல்லும் போது, அந்த பாழடைந்த ஆலைக்குள் பிரபுதேவாவின் உடல் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இந்நிலையில் பிரபுதேவாவின் மனைவியான ரம்யா நம்பீசன் அவருக்கு கண் ஆபரேஷன் செய்ய பணத்தை கட்டிவிட்டு அவரை தேடி வருகிறார். இந்துஜாவை தேடி வரும் நண்பர்கள் ஒவ்வொருவராக இறந்து விடுகிறார்கள். இப்படி ஒவ்வொருவரையும் கொல்வது யார் என்பது தான் மெர்குரி கிளைமேக்ஸ்.

இடைவேளைக்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு தான் பிரபுதேவா அறிமுகம் என்றாலும் மனிதர் நடிப்பில் பிச்சு உதறியுள்ளார். ஐந்து நண்பர்களை கொலை செய்யும் வெறியுடன் அவர் இருப்பது கொடூரமாக உள்ளது. மேயாத மான் பிரியா பவானிசங்கரின் நடிப்பு சூப்பராக உள்ளது. அவரது காதலன் உள்பட நான்கு இளைஞர்களும் வசனம் இல்லை என்ற குறையே தெரியாமல் நடிப்பில் தெறிக்க வைத்துள்ளனர். ரம்யா நம்பீசன் சில காட்சிகளில் வந்து இதம் தருகிறார்.

மெளன மொழி படமான இந்த படத்தில் சொதப்பிய ஒரே நபர் சந்தோஷ் நாராயணன். பல இடங்களில் பின்னணியே இல்லாமல் அமைதியாக விட்டிருந்தால் சூப்பராக இருந்திருக்கும். காது ஜவ்வு கிழிந்திடும் வகையில் ஓவர் இரைச்சலுடன் கூடிய பின்னணி இசை படத்தின் வலிமையை குறைத்துள்ளது. திருவின் ஒளிப்பதிவும், விவேக் ஹர்சனின் படத்தொகுப்பும் கச்சிதம்

மெரிக்குரி: திரை விமர்சனம்வசனம் இல்லாத படத்தில் சப் டைட்டிலை கார்த்திக் சுப்புராஜ் உபயோகித்தது உறுத்தலை தருகிறது. ஆடியன்ஸ்களுக்கு புரியும் வகையில் அவர் மெளன மொழி காட்சிகளை உருவாக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. மற்றபடி மிரட்டும் திரைக்கதை, பிரபுதேவா யார் என்ற சஸ்பென்ஸ், கார்ப்பரேட் நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்பு என கார்த்திக் சுப்புராஜின் உழைப்பை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்,. மொத்தத்தில் ஒரு நல்ல த்ரில் படம் பார்க்க விருப்பம் என்றால் மெர்க்குரி படத்தை தாராளமாக பார்க்கலாம்.

சமூக கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக மெர்க்குரி ஆலையால் ஏற்பட்ட பாதிப்பால் என்ன நேரிடுகிறது என்பதை கதைக்கருவாக வடிவமைத்த இயக்குநா் கார்த்திக் சுப்புராஜூக்கு ஒரு சலுயூட்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News