×

நெட்டிசன்கள் கழுவி ஊற்றும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’…

சுந்தர் சி. இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கௌதம் மேனன், மணிரத்னம் போன்ற இயக்குனர்களில் படங்களில் மட்டுமே சிம்பு அடக்கி வாசிப்பார். மற்ற இயக்குனர்கள் படங்களில் தேவையில்லாத பில்டப்களை செய்து, இந்த படத்தை பார்க்க நாம் ஏன் வந்தோம் என சினிமா ரசிகர்களை யோசிக்க வைத்து விடுவார். இதே கதைதான் அவர் நடித்து இன்று வெளியாகியுள்ள வந்தா ராஜவாதான் வருவேன் படத்திலும் நடந்துள்ளது. கட் அவுட்,
 
நெட்டிசன்கள் கழுவி ஊற்றும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’…

சுந்தர் சி. இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கௌதம் மேனன், மணிரத்னம் போன்ற இயக்குனர்களில் படங்களில் மட்டுமே சிம்பு அடக்கி வாசிப்பார். மற்ற இயக்குனர்கள் படங்களில் தேவையில்லாத பில்டப்களை செய்து, இந்த படத்தை பார்க்க நாம் ஏன் வந்தோம் என சினிமா ரசிகர்களை யோசிக்க வைத்து விடுவார். இதே கதைதான் அவர் நடித்து இன்று வெளியாகியுள்ள வந்தா ராஜவாதான் வருவேன் படத்திலும் நடந்துள்ளது.

நெட்டிசன்கள் கழுவி ஊற்றும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’…

கட் அவுட், பேனர், பாலாபிஷேகம், வீடியோ, மன்னிப்பு என கடந்த சில நாட்களாகவே சிம்பு பற்றிய செய்திகள் அதிகம் அடிபட்டது. இந்நிலையில், அவர் நடித்த வந்தா ராஜாவாதன் வருவேன் படம் இன்று வெளியானது. அவர் கூறியது போலவே, இல்லை.. இல்லை வேண்டாம் என கூறியது போலவே அவரின் பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து சிம்பு மீதான அன்பை வெளிப்படுத்தினர்.

இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் படம் நன்றாக இல்லை. சிம்பு ஓவர் பில்டப். காமெடி சுத்தமாக எடுபடவில்லை.. மொக்க படம் என தொடர்ந்து கூறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் நெகட்டிவாகவே விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

நெட்டிசன்கள் கழுவி ஊற்றும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’…

தெலுங்கில் பவன் கல்யான் நடித்த படத்தின் ரீமேக் ஆன இப்படம் பலவீனமான கதை, திரைக்கதை, வசனம் நகைச்சுவை ஆகியவற்றை கொண்டுள்ளது. பல காட்சிகள் தனது ரசிகனிடம் பேசுவது போல் சிம்பு பேசுவதும், பஞ்ச் டயலாக் பேசுவதும், பத்து பேரை பறக்க விடுவதும், வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பாடல் காட்சிகளும் ‘இன்னும் எத்தனை வருஷண்டா இப்படி படம் எடுப்பீங்க?’ என நம்மை கேட்க வைக்கிறது. படத்தின் பல கதாபாத்திரங்களும் வீணடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சோகமாக பேசி கண்ணீர் விடும்போதும் அதை நம்மை பாதிக்கவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

நெட்டிசன்கள் கழுவி ஊற்றும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’…

ஒரு ரீமேக் படத்தை எவ்வளவு கேவலமாக எடுப்பது என்பதற்கு இந்த படமே சிறந்த உதாரணம் என கடுமையாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News