×

என்.ஜி.கே பாக்கலாமா, வேண்டாமா ? – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் நடிப்பில் மே 31 அன்று வெளியானது. செல்வராகவன் படம் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகிவிடும். அதே போன்று சூர்யாவும் செல்வராகவனும் இணைந்திருக்கும் என்.ஜி.கே படத்துக்கும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்தப் படம் வெள்ளி அன்று வெளியான நிலையில் மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. வேற லெவல், செம மாஸ்,செல்வராகவன் எதிர்பார்த்ததை தந்துவிட்டார், படத்தில் உள்ள நடிகர்கள் தங்கள் ரோலை சிறப்பாக
 
என்.ஜி.கே பாக்கலாமா, வேண்டாமா ? – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் நடிப்பில் மே 31 அன்று வெளியானது. செல்வராகவன் படம் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகிவிடும். அதே போன்று சூர்யாவும் செல்வராகவனும் இணைந்திருக்கும் என்.ஜி.கே படத்துக்கும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்தப் படம் வெள்ளி அன்று வெளியான நிலையில் மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. வேற லெவல், செம மாஸ்,செல்வராகவன் எதிர்பார்த்ததை தந்துவிட்டார், படத்தில் உள்ள நடிகர்கள் தங்கள் ரோலை சிறப்பாக நடித்துள்ளனர் என்று ஒரு சாரார் படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் ஆஹா ஓஹோ என்று கருத்து பதிவிட்டு கொண்டிருந்தாலும் மற்றொரு புறம் #pray_for_Nesamani டிரண்ட ஆனது போல் #pray_for_NGK ஹாஷ்டாக் டிரண்டாகி கொண்டிருக்கிறது. காரணம் சிலரது எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை, குறிப்பாக சூர்யா ரசிகர்கள் மிகவும் நொந்துபோய் உள்ளதாக சமூக வலைதள வட்டார பதிவுகள் காட்டுகின்றன. சூர்யா படம் என்பதை மறந்துவிட்டு தியேட்டருக்குச் செல்லுங்கள் என்று கூறிவருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

என்.ஜி.கே பாக்கலாமா, வேண்டாமா ? – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்

செல்வராகவன் படங்கள் எப்போதுமே தனிவித புரிதல் கொண்டதாக இருக்கும். மேலும் அவரின் படங்கள் தொடக்கத்தில் மறுக்கப்படுவதும் பின்னர் மிகச்சிறந்த படமாக விமர்சிக்கப்படுவதும் வழக்கமானது தான். கதைகளத்தையும் கதாப்பாத்திரங்களையும் ஒரு சேர பின்னி பிசைந்து கதையோடு பயணிக்க வைத்து ஒரு கதையை சொல்வது இயக்குனர் செல்வராகவனின் தனி வித்தை. இந்தப் படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் பெரும்பாலும் படத்திற்கு சாதகமாகவே கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின. பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் தான் பார்க்க வேண்டும் இந்தப் படம் எத்தனை மக்களை கவர்ந்துள்ளது என்று. ஒரு கதையோ, நடிகரோ அனைவரின் எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்வது சாத்தியமற்ற ஒன்று. அதே போல் என்.ஜி.கேவும் செல்வராகவன் தனிநிகர் படங்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

From around the web

Trending Videos

Tamilnadu News