×

பியார் பிரேமா காதல்: திரை விமர்சனம்!

பிக் பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைஸா இணைந்து நடித்துள்ள பியார் பிரேமா காதல் என்ற இந்த படத்தின் அறிவிப்பு வந்ததுமுதல் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. முழுக்க முழுக்க காதல் படமான இதனை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தாயாரித்துள்ளார். காதலை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதை படத்தின் தலைப்பே உணர்த்தும். மூன்று மொழிகளில் காதல் என பெயர் வைத்துள்ளனர். ஸ்ரீ மற்றும் சிந்துஜா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஹரிஷ் மற்றும் ரைஸா
 
பியார் பிரேமா காதல்: திரை விமர்சனம்!

பிக் பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைஸா இணைந்து நடித்துள்ள பியார் பிரேமா காதல் என்ற இந்த படத்தின் அறிவிப்பு வந்ததுமுதல் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. முழுக்க முழுக்க காதல் படமான இதனை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தாயாரித்துள்ளார்.

காதலை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதை படத்தின் தலைப்பே உணர்த்தும். மூன்று மொழிகளில் காதல் என பெயர் வைத்துள்ளனர். ஸ்ரீ மற்றும் சிந்துஜா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஹரிஷ் மற்றும் ரைஸா இடையே நடக்கும் ரொமான்ஸ், காதல் அதன் கூடவே வரும் பிரச்சனைகள் மற்றும் தவறான புரிதல் தான் படத்தின் முழு நீள கதை.

பக்கத்து கம்பெணியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒருதலையாக காதலிக்கிறார் ஹரிஷ். ஆனால் இன்ப அதிர்ச்சியாக ஒருநாள் திடீரென ஹரிஷ் வேலை பார்க்கும் கம்பெனியில் சேர்ந்து தானாகவே வந்து ஹரிஷிடம் பேசுகிறார் ரைஸா. இந்த பேச்சு இருவருக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்துகிறது. இறுதியில் நான் உன்னை காதலிக்கிறேன் உன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஹரிஷ் வந்து நிற்க, நான் உன்னுடன் நட்பாகத்தான் பழகினேன் நமக்குள் கல்யாணம் செட் ஆகாது என தடை போடுகிறார் ரைஸா. பின்னர் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதி கதை.

லிவ்விங் டுகெதர் கதையை மிகவும் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் நளன். படத்தின் மிகப்பெரிய தூணாக இருப்பது பின்னணி இசை தான். யுவன் ஷங்கர் ராஜா படத்தையே தாங்கி நிற்கும் தூணாக இருக்கிறார். உயிரோட்டமான பின்னணி இசை மற்றும் பாடல்களில் ஜொலிக்கிறார் யுவன். படத்தில் 12 பாடல்கள் இருந்தாலும், எந்த ஒரு பாடல் கூட படத்தின் திரைக்கதையிலிருந்து விலகிப்போவதில்லை, இயற்கைக்கும் உணர்வுகளுக்கு இடையே பின்னிகிடக்கிறது படத்தின் இசை.

முழுக்க முழுக்க இளைஞர்களை இலக்காக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதை படத்தின் வசனங்கள், தற்போதுள்ள ட்ரெண்டிங் டயலாக்குகள் பிரதிபலிக்கின்றன. இளைஞர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை கொடுக்கும்.

பியார் பிரேமா காதல்: திரை விமர்சனம்!

முதல் பாதி மிகவும் வேகமாக செல்கிறது. இரண்டாவது பாதியில் சில இடங்களில் படம் மெதுவாக நகர்கிறது. இருந்தாலும் இடைவேளைக்கு பின்னர் வரும் சில திருப்பங்கள் படத்தை முன்னோக்கி செல்ல உதவுகிறது. படம் முழுக்க முழுக்க ஹரிஷ் மற்றும் ரைஸாவையே சுற்றி சுற்றி நகர்கிறது. இதுவே படத்தின் பலமும் பலவீனமும் கூட. இரண்டாம் பாதி முழுவதும் இருவருக்கும் இடையேயான ஈகோ மற்றும் பிரச்சனைக்கு தீர்வு கான்பதிலேயே நகர்கிறது. சில காட்சிகள் புல்லரிக்கும் விதமாக உள்ளது. ரசிகர்கள் விரும்பும் விதமாகவே உள்ளது அவை.

ஹரிஷ் மற்றும் ரைஸா கதாப்பாத்திரம் தேர்வு சரியே, நடிப்பில் பாஸ் செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் ஹெட் மாஸ்டர் போல் படத்தில் இருப்பது யுவன் ஷங்கர் ராஜா தான். யுவன் தான் படத்தின் முதுகெலும்பு எனலாம். வசனங்கள் இல்லாமல் யுவனின் இசை மூலமே படத்தின் கதையை ரசிகர்களுக்கு உணர்த்திவிடலாம். ஹரிஷ் மற்றும் ரைஸா கெமிஸ்ட்ரி நன்றாகவே வந்திருக்கிறது.

முழுக்க முழுக்கா காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும் காமெடிக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. குறிப்பாக தீப்ஸ், முனிஷ்காந்த் வரும் காட்சிகள் பட்டைய கிளப்புகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் நடித்திருக்கிறார் நாகேஷ் பையன் ஆனந்த்பாபு. ரைசாவின் தந்தையாக அவரும் அவர் தனது கதாப்பாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக நடித்திருக்கிறார். அற்புதமான கிளைமேக்ஸ் என படம் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறது. அறிமுக இயக்குனர் நளன் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். மொத்தத்தில் பியார் பிரேமா காதல் இளைஞர்களுக்கு கொண்டாட்டம்.

ரேட்டிங்ஸ்: 3.5/5

From around the web

Trending Videos

Tamilnadu News