×

இப்படி ரஜினி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு – பேட்ட விமர்சனம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்… உடன் பிறவா சகோதரனனின் குடும்பத்தை பரம்பரை பகை பழி தீர்க்க முயல அதை ரஜினி எப்படி முறியடிக்கிறார் என்பதே பேட்ட படத்தின் ஒரு வரிக்கதை. உண்மையிலேயே ஒரு மரண மாஸ் ரஜினி படம். கல்லூரி ஹாஷ்டல் வார்டனாக வரும் ரஜினிக்கு அங்கே ஒரு லோக்கல் ரவுடி கும்பலுடன் மோதல் ஏற்படுகிறது. மேலும், கல்லூரியில் படிக்கும் மாணவனின் காதலுக்கும் உதவி செய்கிறார். அப்போது, ரஜினியை
 
இப்படி ரஜினி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு – பேட்ட விமர்சனம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்…

உடன் பிறவா சகோதரனனின் குடும்பத்தை பரம்பரை பகை பழி தீர்க்க முயல அதை ரஜினி எப்படி முறியடிக்கிறார் என்பதே பேட்ட படத்தின் ஒரு வரிக்கதை.

உண்மையிலேயே ஒரு மரண மாஸ் ரஜினி படம். கல்லூரி ஹாஷ்டல் வார்டனாக வரும் ரஜினிக்கு அங்கே ஒரு லோக்கல் ரவுடி கும்பலுடன் மோதல் ஏற்படுகிறது. மேலும், கல்லூரியில் படிக்கும் மாணவனின் காதலுக்கும் உதவி செய்கிறார். அப்போது, ரஜினியை கொலை செய்ய அந்த கும்பல் வரும்போது, அங்கு வேறொரு கும்பலும் வருகிறது. அந்த கும்பல் கொலை செய்ய வந்தது அந்த மாணவனை. அந்த மாணவன் யார்? அவர்கள் ஏன் அவனை கொலை செய்ய வந்தார்கள்? அதன் பின்னணி என்ன? ரஜினி எப்படி வில்லனை பழிதீர்த்தார் என்பதே மீதிக்கதை.

இப்படி ரஜினி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு – பேட்ட விமர்சனம்

அட அட அட!.. இப்படி ஒரு ரஜினி படம் பார்த்த ரொம்ப வருஷம் ஆச்சு என ஒரு பொதுவான ரசிகனையும் நினைக்க வைத்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். ஹாஸ்டல் வார்டனாக ரஜினி அறிமுகம் ஆகும் காட்சியே அதகளம். அதன்பின் ஒவ்வொரு பிரேமிலும் அழகாக, ஸ்டைலாக மிளிர்கிறார் ரஜினி. படம் முழுக்க ரஜினியிசம்.

ரஜினி வெறியரான கார்த்திக் சுப்புராஜ் அபூர்வ ராகங்கள், முள்ளும் மலரும், பாட்ஷா, தளபதி என ரஜினியிடம் ரசிகர்கள் ரசித்த அனைத்து காட்சிளையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். மாஸ் என்றால் அது நான்தான் என மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினி. வசன உச்சரிப்பு, உடல் மொழி, அதிரடி சண்டை காட்சிகள் என அதகளம் செய்கிறார். ரஜினி இப்படி படம் நடிச்சாலே போதும் என்கிற உணர்வை ஓவ்வொரு காட்சியும் நமக்கு ஏற்படுத்துவதே கார்த்திக் சுப்புராஜின் மாபெரும் வெற்றி. ஒவ்வொரு பிரேமையும் ரசித்து ரசித்து செய்துள்ளார். ஒரு காட்சியில் கூட தொய்வை ஏற்படுத்தாமல் நேர்த்தியாக, விறுவிறுவென திரைக்கதையை அமைத்துள்ளார்.

இப்படி ரஜினி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு – பேட்ட விமர்சனம்

சசிகுமார், திரிஷா, சிம்ரன் அனைவருக்கும் சிறு சிறு வேடங்கள். அதை அவர்கள் கச்சிதமாக செய்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு இப்படத்தில் முக்கிய வேடம். வழக்கம் போல் அசால்ட் செய்துள்ளார். படத்தின் கடைசி வரைக்கும் அவர் வில்லனாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நம்மை ஆசைப்பட வைத்துள்ளது அவரின் நடிப்பு.

படத்தின் முக்கிய வில்லன் நவாசுதின் சித்திக். அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு குரூரம் காட்டும் வழக்கமான வேடத்தில் பட்டையை கிளப்பியுள்ளார். படத்தின் பெரிய பலம் அனிருத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு. காட்சிக்கு காட்சி ரஜினி மாஸ் காட்டுவதால் அவருக்கு நிறைய வேலை. பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். பல கோணங்களில் ரஜினியை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் திரு. பீட்டர் ஹெய்னின் சண்டை காட்சிகளில் தீப்பறக்கிறது.

இப்படி ரஜினி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு – பேட்ட விமர்சனம்

திரிஷா, சிம்ரன், சசிகுமார் ஆகியோரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். மதுரையில் சசிகுமார், திரிஷா, ரஜினியின் குழந்தை என அனைவரும் கொல்லப்பட்ட பின் ரஜினி எங்கே போனார்? ஹாஸ்டல் வார்டனாக வரும் முன் 17 வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. அதேபோல், படத்தின் கதை எங்கு நடைபெறுகிறது என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆனாலும், தனது ஸ்டைலான, அலட்டலான நடிப்பில் அனைத்தையும் மறக்கடித்து படம் முழுக்க ஆதிக்கம் செய்துள்ளார் ரஜினி. எத்தனை ஸ்டார்கள் வந்தாலும் நானே எப்போதும் சூப்பர்ஸ்டார் என மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினி.

இப்படி ரஜினி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு – பேட்ட விமர்சனம்

திரையில் ரஜினியை ரசித்து ரொம்ப நாளாச்சு. இப்ப வரும் படங்களில் பழைய ரஜினியை பார்க்க முடியவில்லை என புலம்பும் ரஜினி ரசிகர்கள் உட்பட அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் ஒரு படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற தரமான சம்பவம் பேட்ட… தியேட்டரில் கண்டு ரசியுங்கள்…

From around the web

Trending Videos

Tamilnadu News