×

சாமி 2 திரை விமர்சனம்

ஹரி இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த சாமி படம் வழக்கமான ஹரி படங்களை போல் மிக மிக அசுரவேகத்தில் பறக்கிறது. சாமி 2வின் கதை என்னவென்றால் முன்பு ஒரு காலத்தில் ஆறுச்சாமியால் பழிவாங்கப்பட்ட பெருமாள் பிச்சையின் வாரிசுவும், ஆறுச்சாமியின் வாரிசுவுமான ராம்சாமியும் மோதிக்கொள்ளும் கதைதான் சாமி2 முதல் பாகத்தில் இறந்துவிட்டாரா இறக்கவில்லையா என காண்பிக்கப்பட்ட பெருமாள் பிச்சையின் வாரிசு பாபி சிம்ஹா, ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுச்சாமி விக்ரமையும், தாய் ஐஸ்வர்யா ராஜேஸையும் கொலை செய்ய, அப்போது
 
சாமி 2 திரை விமர்சனம்

ஹரி இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த சாமி படம் வழக்கமான ஹரி படங்களை போல் மிக மிக அசுரவேகத்தில் பறக்கிறது.

சாமி 2வின் கதை என்னவென்றால் முன்பு ஒரு காலத்தில் ஆறுச்சாமியால் பழிவாங்கப்பட்ட பெருமாள் பிச்சையின் வாரிசுவும், ஆறுச்சாமியின் வாரிசுவுமான ராம்சாமியும் மோதிக்கொள்ளும் கதைதான் சாமி2

முதல் பாகத்தில் இறந்துவிட்டாரா இறக்கவில்லையா என காண்பிக்கப்பட்ட பெருமாள் பிச்சையின் வாரிசு பாபி சிம்ஹா, ஸ்ரீலங்காவில் இருந்து  இந்தியாவுக்கு வந்து ஆறுச்சாமி விக்ரமையும், தாய் ஐஸ்வர்யா ராஜேஸையும் கொலை செய்ய, அப்போது பிறக்கும் மகன்   ராம்சாமி விக்ரம் வளர்ந்து பாபிசிம்ஹாவிடம் மோதுவதுதான் காட்சி அமைப்புகளாக பார்வையாளர்களுக்கு பர பர விறு விறு பரவசத்தை தருகிறது.

லாஜிக் மீறல்கள் அதிகம் இல்லாமலும் தற்போது நடந்து வரும் அரசியல்,பொருளாதார குழப்பங்கள், நாட்டு நிலைமைகளும் அழகாக சொல்லப்பட்டுள்ளது.

கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், அவரின் அப்பாவாக பிரபு மத்திய அமைச்சராக நடித்திருக்கிறார் .

சூரியின் காமெடி வரவர சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது வழக்கமாக ஹரி படங்களில் வரும் காமெடி காட்சிகளில் வறட்சி அதிகம் இருக்கும் ஆக்சனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார். இருந்தாலும் சூரியின் இதுபோன்ற மரண மொக்கை காமெடி அவரை பீல்ட் அவுட் ஆக்கி விடும்.

பாபிசிம்ஹாவின் வில்லன் தோற்றமும் நடிப்பும் மிரட்டுகிறது.  வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இருப்பினும் முதல் பாகத்தின் பெருமாள் பிச்சைக்கு ஈடான நடிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தகக்கது.
கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஸ் போன்றோரும் தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து நடித்துள்ளனர்.
தேவிஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் பழைய ரகம், பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
டான்ஸ் மாஸ்டர்,ஸ்டண்ட் மாஸ்டர் அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் பழைய பார்முலா ஹரி படம்னா இப்டித்தான் போகும்னு அடுத்தது என்னனு லேசா யோசிக்க வைக்கிற ஹரியின் தொடர் திரைக்கதை பெரிய மைனஸ்தான்.
விக்ரமின் ரசிகர்களுக்கும், ஹரியின் ரசிகர்களுக்கும் ரொம்ப பிடிக்க கூடிய மாஸ் படம்தான் ஆனால் நடுநிலையாளர்களை கவருமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News