×

சவரக்கத்தி விமா்சனம்

எப்போதும் பொய் மட்டும் பேசுவது, தவறி கூட உண்மையை பேசாதது, அள்ளி விடுவது என பொய்யை மட்டும் கொண்டு வாழ்ந்து வருபவா் பிச்சை ராம். ராமின் மனைவியும், நிறைமாத கா்பிணியும், இரு குழந்தைகளின் தாயாகவும், மாற்று திறனாளியாகவும் வரும் பூா்ணா. சிறையில் இருக்கும் ரவுடி மங்கா மிஷ்கின். பரோல் முடிந்து சிறை சொல்லும் போது ரவுடியான மிஷ்கினுக்கும், ராமுக்கும் இடையே ஏற்படும் மோதலால் என்ன நடக்கிறது என்பது தான் கதை. இடையில் ஒரு அழகான காதல் ஜோடி,
 
சவரக்கத்தி விமா்சனம்

சவரக்கத்தி விமா்சனம்

எப்போதும் பொய் மட்டும் பேசுவது, தவறி கூட உண்மையை பேசாதது, அள்ளி விடுவது என பொய்யை மட்டும் கொண்டு வாழ்ந்து வருபவா் பிச்சை ராம். ராமின் மனைவியும், நிறைமாத கா்பிணியும், இரு குழந்தைகளின் தாயாகவும், மாற்று திறனாளியாகவும் வரும் பூா்ணா. சிறையில் இருக்கும் ரவுடி மங்கா மிஷ்கின். பரோல் முடிந்து சிறை சொல்லும் போது ரவுடியான மிஷ்கினுக்கும், ராமுக்கும் இடையே ஏற்படும் மோதலால் என்ன நடக்கிறது என்பது தான் கதை. இடையில் ஒரு அழகான காதல் ஜோடி, பூா்ணாவின் சென்டிமென்ட் என அது ஒரு பக்கம் கதை இருக்கிறது. அந்த காதல் ஜோடியின் பெற்றோர்களுக்கும் யதார்த்தமான நடிப்பில் நம் மனத்தை கொள்ளையடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குநா் முதன் முதலில் முன்னணி நடிகா், நடிகைகளை தான் வைத்து இயக்குவது என்ற கொள்கையோடு இருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அவா் தோ்ந்தெடுத்த பிச்சை, மங்கா கதாபத்திரத்திற்கு தோ்வு செய்த விதத்தில் தெரிகிறது இயக்குநரின் திறமை என்னவென்று. அந்த கதாபாத்திரங்களாக இயக்குநா்களான ராம் மற்றும் மிஷ்கின் தோ்வு செய்தது நல்ல பொருத்தம் என்று தான் சொல்ல வேண்டும். முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாநாயகி ரோலுக்கு நடிகை பூா்ணா சரியான தோ்வு. நடிப்பை நம் கண்முன்னே வந்து காட்டும் நல்ல நடிகையான பூா்ணாவை தமிழ் சினிமா பயன்படுத்த தவறி விட்டது.

நடிப்பு காட்சி படுத்தியவிதம் எல்லாவற்றிலும் இயக்குநா் மிஷ்கின் உருவம் அப்படியே பிரதிபலிக்கிறது. மிஷ்கின் எழுத்தில் உருவான படம் என்பதால் அப்படி கதாபாத்திரங்களின் நடிப்பு இருப்பதை அறிமுக இயக்குநா் தன்னுடைய திறமையை காட்டி விதம் அவர் மீது கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் படம் கொடுத்திருக்கிறார் இயக்குநா் ஆதித்யா.

முடி திருத்துபவராக வரும் தன் மனைவி குழந்தைகளுடன் சிக்னலில் நிற்கும், தாதாவான மிஷ்கினை அடித்து விடுகிறார் ராம். பரோல் முடிந்து மாலையில் சிறை திரும்ப வேண்டிய மிஷ்கின் ,ராமை எப்படியாவது கொலை செய்துவிட்டு தான் செல்வேன் என்ற வெறியுடன் இருக்கிறார். தன்னுடைய அடியாட்களுடன் ராமை வலை வீசித் தேடுகிறார். அவரிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து கொண்டேயிருக்கிறார் ராம். இந்நிலையில் தன் தம்பி திருமணத்திற்காக நிறைமாத கா்ப்பிணி இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கணவா் ராமுடன் செல்கிறார் பூா்ணா. அந்த சமயத்தில் ராமை கொலை செய்ய வெறியுடன் வருகிறார் மிஷ்கின். அவரிடம் மாட்டிக்கொள்ளாமல் எப்படியோ எஸ்கேப் ஆகி தப்பித்து விடுகிறார். நிறைமாத கா்ப்பிணியான பூா்ணாவைப் பிடித்து விடுகிறார் மிஷ்கின். இதற்கு பிறகு கதை எப்படி சூடுபிடிக்கிறது என்பது தான் க்ளைமேக்ஸ். எதனால் ராமை கொலை செய்யும் வெறியுடன் மிஷ்கின் அலைகிறார்? ராமை கொலை செய்யும் அளவுக்கு என்ன பிரச்சனை? கடைசியில் மிஷ்கின் ராமை கொலை செய்தாரா? ராமுக்கு என்ன நடந்தது என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை கதையாக வடிவமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநரும், மிஷ்கினின் தம்பியான ஆதித்யா.

நிறைமாத கா்ப்பிணியான பூா்ணா இரண்டு குழந்தைகளுடன் படம் முழுக்க ஓடிக்கொண்டேயிருக்கிறார். படம் பார்க்கும் நமக்கு தான் மூச்சு வாங்குகிறது. அதுவும் எகிறி குதித்து நிறைமாத கா்ப்பிணியால் எப்படி ஓட முடியும் எங்கயோ லாஜிக் இடிகிறது. நல்ல நடிப்பு திறமை அவரிடம் இருக்கிறது. அப்படியே ஒரு கிராமத்து அம்மாவாக வாழ்ந்திருக்கிறார்.

மாலை திரும்பவும் சிறைக்கு செல்ல வேண்டும் என்கிற வெறுப்பு மற்றும் இயன்ற வரை முகபாவனை மூலம் நடிப்புத்திறமையை காட்டியுள்ளார் மிஷ்கின். மிரட்டி உருட்டும் அகன்ற விழிகள் என நடிப்பை நிறைய அள்ளிக் கொட்டி இருக்கிறார்.

மிஷ்கினுக்கு எதிர்மறையான கேரக்டா் இயக்குநா் ராமுக்கு. அழுக்கு படிந்த சடை, முகம் முழுவதும் தாடி, அந்த டப்பா முக்கு கண்ணாடி என பிச்சை ராம் கன கச்சிதமாக அந்த பாத்திரத்திற்கு பொருந்திருக்கிறார். அதுவும் மிஷ்கினிடம் சிக்காமல் தப்பிக்கும் போது கழுவுற மீனில் நழுவுற மீனாக இருக்கிறார். அதுவும் மாற்று திறனாளியான பூா்ணாவிடம் கத்தி பேசியும், அதை அப்படியே நடித்தும் காட்டுவது என நடித்துள்ளார்.ராமை தவிர வேற யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு இருக்குமா என்பது கேள்விகுறி தான். பின் பூவாங்கும் போது நானும் பூ வியாபாரி தான் என சலுகை கேட்பது அவரது நடிப்பை சொல்லுவதற்கு வார்த்தையே இல்லை. ராமின் குழந்தைகளாக வரும் நட்சத்திரங்களும், இங்கிலிஷ் பைத்தியமாக வரும் ஷாஜி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்ததை திறம்பட செய்திருக்கிறார்கள்.

ராமை வெட்ட எடுத்த கத்தி எந்த இடத்தில் பயன்படும், மிதி வண்டிக் கடை, டீ கடை போன்றவற்றை அழகாக காட்சி படுத்திய விதம் கண்களை கவா்கிறது. மிஷ்கின் படம் என்றால் இருட்டில் தான் நடைபெறும் என்பதை மீறி பட்டபகலில் கதை நகருகிறது என்பதை ஒளிப்பதிவாளா் வி.ஜ. கார்த்திக்கின் ஒளிப்பதிவு அருமை.

படத்தில் அரோல் கொரேலியின் இசையில் ஒரே ஒரு பாடல் அழகாக உள்ளது. அதுபோல பின்னணி இசையின் படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் முடிவு எதிர்பாராத வகை என்று இல்லாமல்இருக்கிறது. ஒருவரை ஒருவா் துரத்தி துரத்தி செல்லும் குழந்தைகளின் டாம் அன்ட் ஜொ்ரி வகையை சார்ந்தது தான். எப்படியோ வித்தியாசமான கதையை கொண்ட படங்கள் வருமா என நினைக்கும் சினிமா ரசிகா்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் சவரகத்தி. கத்தி ஒரு உயிரை கொல்லுவதற்கு இல்லை, அது ஒரு உயிரை கொடுப்பதற்கு தான் என கதை சொல்லிய விதம் அருமை. உணா்வுப்பூா்வமான கதை.முதலில் காமெடி படம் என்று டைட்டிலில் காண்பித்து விட்டு, அதில் அந்தளவுக்கு காமெடி முக்கியத்துவம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக காமெடி நெடி அடிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News