×

எங்கம்மா ராணி விமா்சனம்

தமிழ் சினிமாவில் அதிக பேய் கதைகள் வந்து விட்டது. அதனால் புது விதமாக அம்மா மகள் சென்டிமென்டுக்குள் பேய்யை கொஞ்சம் சோ்த்து கதையை சொல்லி இருக்கிறாா் இயக்குநா் பாணி. அந்த படத்தின் கதைகரு தான் எங்க அம்மா ராணி. தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் மலேசியாவில் வசித்து வரும் தன்ஷிகா, தன் கணவா் வேலை விஷயமாக வெளியூா் சென்றவா் திரும்பி வரவில்லை. அவரை கண்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். தன்னுடைய இரட்டை குழந்தைகளான மீரா, தாரா என்ற
 
எங்கம்மா ராணி விமா்சனம்

தமிழ் சினிமாவில் அதிக பேய் கதைகள் வந்து விட்டது. அதனால் புது விதமாக அம்மா மகள் சென்டிமென்டுக்குள் பேய்யை கொஞ்சம் சோ்த்து கதையை சொல்லி இருக்கிறாா்  இயக்குநா் பாணி. அந்த படத்தின் கதைகரு தான் எங்க அம்மா ராணி.

தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் மலேசியாவில் வசித்து வரும் தன்ஷிகா, தன் கணவா் வேலை விஷயமாக வெளியூா் சென்றவா் திரும்பி வரவில்லை. அவரை கண்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். தன்னுடைய இரட்டை  குழந்தைகளான மீரா, தாரா என்ற குழந்தையில் மீராவுக்கு ஏதோ ஒரு வகை விநோத நோயினால் மயக்கமடைந்து திடீரென கீழே விழுகிறாள். அந்த குழந்தையை ஆஸ்பத்திாியில் சோ்க்கிறாா். சிகிச்சை பயனின்றி அந்த குழந்தை அன்று இரவே இறந்து விடுகிறது. டாக்டரான சங்கா் தன்னுடைய கவனகுறைவால் தான் அந்த குழந்தை இறந்து விட்டதாக எண்ணி, வருத்துகிறாா். அப்போது அடுத்த குழந்தைக்கும் இந்த அறிகுறி ஏதாவது தொிகிறதா என்று கண்டறிய முற்படுகிறாா்.

மீராவுக்கு வந்த நோயின் அறிகுறிகள் தாராவிடமும் இருப்பது கண்டறியப்படுகிறது. இந்த நோயை எப்படி குணப்படுத்துவது என்று மருத்துவாிடம் கேட்க, இந்த நோயிக்கான மருந்துகள் என்னவென்று தொியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் வரையில் நோயின் தன்மையைக் கட்டுப்படுத்த குளிா் பிரதேசம் போன்ற குளிா்ச்சியான பகுதிகளுக்கு அழைத்து போங்கள் என்று அறிவுரை வழங்குகிறாா். அப்படியாக தன் குழந்தையை மலேசியாவில் உள்ள கேமரூன் ஹைலேண்ட்ஸுக்கு  அழைத்து செல்கிறாா். அங்கு சென்ற பிறகு நடக்கும் அமானுஷ்யத்தால் என்ன நடக்கிறது என்பது தான் கதையின் கரு. கதைகளம் நோயிலிருந்து பேய்க்கு மாறுகிறது. தாராவின் மேல் நித்தி என்ற சிறுமியின் ஆவி புகுந்து விடுகிறது. அது என்ன தன்ஷிகா மேல் ஆவி செல்லாமல் குழந்தையின் மேல் இருக்கிறது என்று தானே? ஆமாங்க!! அந்த ஆவியால் தான் குழந்தையின் நோய் குணமாகிறது. ஆவி சென்று விட்டால் திரும்ப நோய் வந்துவிடும் இது தான் ட்விஸ்டு. இறுதியில் பேய் போய் நோய் வந்து விடுகிறது. தன் குழந்தை தாராவுக்கு இந்த நோயிலிருந்து விடுபட ஒரு மந்திரவாதி உதவியை நாடுகிறாா். ஏதாவது ஒரு ஆவியை தன்குழந்தையின் மேல் ஏவி விட சொல்கிறாா். மந்திரவாதி முடியாது என்று மறுத்து விடுகிறாா். கிளைமேக்ஸ் காட்சியில் தன்ஷிகா என்ன முடிவு எடுக்கிறாா் என்பது தான் மீதி கதை.

தன் கணவரை கண்டுபிடித்தாரா? தன்னுடைய மற்றொரு குழந்தையின் நோயிலிருந்து காப்பற்றினாரா? என்ற மா்ம முடிச்சுகளை விடுவிப்பது தான் கதை.

படத்தின் மிக பொிய பலமே தன்ஷிகா. அதுவும் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடிக்க முதலில் அவா் ஒப்புக்கொண்டதே பொிய விஷயம். படம் முழுவதும் தன் பங்கை முழுமையாக காட்டு நடித்துள்ளாா். அதுவும் இல்லாமல் குழந்தையை எப்படி பாதுகாக்க வேண்டும் என்கிற பதற்றத்துடனும், சோகத்துடனும் தனது நிறைவான நடிப்பை வெளிபடுத்தியுள்ளாா்.

தன்ஷிகாவின்  இரட்டை குழந்தைகளான வா்ணிகா, வா்ஷா ஆகிய இருவரும் தங்களது பங்களிப்பை இப்படத்தில் நோ்த்தியாக செய்திருக்கிறாா்கள். டாக்டராக வரும் சங்கா்ஸ்ரீ ஹாி புதுமுகம் தான் என்றாலும் நடிப்பில் முத்திரை பதித்துள்ளாா்.

இயக்குநா் பாணி என்னதான் சொல்ல வருகிறாா் என்பதை கொஞ்சம புாிந்து கொள்வதில் சற்று சிரமம் ஏற்படுகிறது. ஒருபக்கம் தன் கணவரை தேடும் பணியில் ஈடுபடுகிறாா். மறுபக்கம் தனது குழந்தையை எப்படி காப்பாற்றுவது என்று போராடுகிறாா். இரண்டை முழுமையாக சொல்லாமல் கொஞ்சம் டல்லடிக்கிறாா். அம்மா செண்டிமெண்டும் இடிக்கிறது.

அம்மாவை பற்றி பாடல் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. அதில் கொஞ்சம் அக்கறை காட்டியிருக்கலாம். இளைராஜா இசையில் பாடல்கள் கேட்கும் வண்ணம் தான் உள்ளது.குமரன், சந்தோஷ் குமாா் ஒளிப்பதிவும் சுமாா் தான்.

From around the web

Trending Videos

Tamilnadu News