×

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

நம்ம சினிமா உலகம் எத்தனையோ காதல் படங்களை கண்டுள்ளது. ஆதம் ஏவாள் காதல் முதல் ஷாஜகான் மும்தாஜ் ஹரிதாஜ் காதல் என பல காதல் படங்களை எல்லாம் பார்த்து விட்டோம். பெரிய பட்ஜெட் காதல் முதல் சிறிய பட்ஜெட் காதல் படம் என பலவற்றை கடந்து வந்து விட்டோம். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியல் சிறிய ரக பட்ஜெட் படம். இயக்குனர்கள் சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறே பேர்வழி என்று சற்று தடுமாறி விடுகின்றனர். குறைந்த முதலீட்டில் படம்
 
காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

நம்ம சினிமா உலகம் எத்தனையோ காதல் படங்களை கண்டுள்ளது. ஆதம் ஏவாள் காதல் முதல் ஷாஜகான் மும்தாஜ் ஹரிதாஜ் காதல் என பல காதல் படங்களை எல்லாம் பார்த்து விட்டோம். பெரிய பட்ஜெட் காதல் முதல் சிறிய பட்ஜெட் காதல் படம் என பலவற்றை கடந்து வந்து விட்டோம். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியல் சிறிய ரக பட்ஜெட் படம். இயக்குனர்கள் சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறே பேர்வழி என்று சற்று தடுமாறி விடுகின்றனர். குறைந்த முதலீட்டில் படம் எடுக்கும் போது ரசிகா்களை ஈர்க்கும் விதத்தில் கதை இருந்தால் கண்டிப்பாக மாஸ் ஹிட்டை கொடுக்கும். இதை மனதில் வைத்து படம் எடுத்தால் போதும்.

காத்திருப்போர் பட்டியல் படமானது நம்ம மாஸ் ஹீரோ விஜய் சேதுபதி பின்னணி குரலுடன் ஆரம்பமாகிறது. எந்த வேலைக்கும் செல்லாமல் இருக்கும் வாலிபராக புதுமுக நாயகன் சச்சின் மணி நடித்துள்ளார். இதற்கிடையில் சச்சின் மணி நாயகி நந்திதாவை உருகி உருகி காதலிக்கிறார். எப்போதும் நடக்கும் காதல் சீசன்களாக முதலில் மோதலில் ஆரம்பித்து பின் காதலில் சிக்குவது என நாயகி நந்திதா தன்னுடைய கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். பணக்கார வீட்டு பெண்ணை காதல் செய்தால் எப்படியும் பெற்றோர் எதிர்ப்பு கிளம்பும். எனவே இங்கும் அவர்களது காதலை ஒத்துக்கொள்ளாத நந்திதாவின் பெற்றோர் வேறு திருமணம் செய்கிறார். இதனால் காதலியை காப்பாற்ற செல்லும் நாயகன் சச்சின் மணி ரயிலில் பயணம் செய்யும் போது எதிர்பாரத விதமாக ரயில்வே போலீசாரிம் மாட்டிக்கொள்கிறார். எப்படியாவது காதலியை காப்பாற்ற வகையில் ரயில்வே போலீசாரிடமிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்கிறார். இறுதியில் கிளைமேக்ஸ் சீன் என்ன நிகழ போகிறது? காதலியை மீண்டாரா, போலீசிலியிருந்து தப்பித்தாரா என்பது தான்.

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

இந்த படத்தில் நகைச்சுவையாக ஒரு நட்சத்திர கூட்டமே களம் கட்டி நடித்துள்ளது. நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, அப்புக்குட்டி, மயில்சாமி, சென்ராயன் என பலரும் காமெடியில் கலக்கியிருக்கின்றனர். இரண்டு காட்சியில் மட்டும் வரும் நான் கடவுள் ராஜேந்திரனை நன்றாக யூஸ் பண்ணியிருந்தால் படம் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்.

படத்தில் திடுக்கிடும் திருப்பங்களும், விறுவிறுப்பான காட்சிகளும் இல்லாத காரணத்தால் படம் சப்பென்று பயணிக்கிறது. புதுமுக நாயகன் சச்சின் மணி தனக்கு கொடுத்ததை சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்து ஹீரோ ரெடி. அதுபோல ரெயில்வே போலீசாக வரும் அருள்தாஸ் மிடுக்கான அதிகாரியாக கலக்கியிருக்கிறார். ரயில்வே போலீசை யாரும் அந்தளவுக்கு காட்டு கொள்ளுவதில்லை என்ற காட்டத்தில் அதை சிறப்பாக கொட்டியுள்ளார்.

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

லாக்கப்பில் நாயகன் தனது காதல் கதை சொல்வது என நிறைய படங்களை பார்த்து விட்டோம். அந்த தொனியில் கதை செல்கிறது. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன், லாக்கப், பாடல் காட்சிகளை என ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் அழகாக படம் பிடித்த காட்டிய விதம் அருமை.

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

குஞ்சிதபாதமாக செக்ஸ் டாக்டராக வரும் மனோபாலா இரட்டை அர்த்த வசனம் பேசும் போது தியேட்டரில் சிரிப்பொலி ஒலிக்கிறது. சில இடங்களில் சசிகுமார் ரசிகராக வரும் அருண்ராஜா காமராஜ் சிரிப்பு வர முயற்சித்திருக்கிறார் என்றே சொல்லாம். ஷான் ரோல்டன் இசையா என்று கேட்க வைத்திருக்கிறது.பாடல்கள் கேட்கும் விதம் சுமார் ரகம் தான். மூன்று பாடல்கள் இருக்கிறது. இயக்குனர் காமெடி, கதை என்று எதையும் சரியாக செல்லாமல் கடலில் தத்தளிக்கும் கப்பல் போல் இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News