×

மாஸ் மரண மாஸ்… சூர்யா – சிவா இணையும் புதிய படத்தின் டீம்.. வெளியான வீடியோ…

Suriya 39 Team Update – இயக்குனர் சிவாவுடன் நடிகர் சூர்யா இணையும் புதிய திரைப்படம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா காப்பான் திரைப்படத்தை முடித்த கையோடு ‘சூரரை போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபின் விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இன்று இயக்குனர் சிவா தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். எனவே, இன்று மாலை 5.40 மணிக்கு சூர்யாவின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்
 
மாஸ் மரண மாஸ்… சூர்யா – சிவா இணையும் புதிய படத்தின் டீம்.. வெளியான வீடியோ…

Suriya 39 Team Update – இயக்குனர் சிவாவுடன் நடிகர் சூர்யா இணையும் புதிய திரைப்படம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா காப்பான் திரைப்படத்தை முடித்த கையோடு ‘சூரரை போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபின் விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இன்று இயக்குனர் சிவா தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். எனவே, இன்று மாலை 5.40 மணிக்கு சூர்யாவின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. விஸ்வாசம் திரைப்படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ரூபன், சண்டை பயிற்ச்சியாளர் திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் மிலன், இசையமைப்பாளர் இமான் என அனைவரும் இப்படத்தில் பணிபுரியவுள்ளனர் என அதில் காட்டப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர். சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான என்.ஜி.கே சரியான வரவேற்பை பெறாத நிலையில், இப்படம் பட்டையை கிளப்பும் என சூர்யாவின் ரசிகர்கள் கருதுகின்றனர். அதே நேரம், இப்படத்திற்கு முன்னரே காப்பான் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் படம் போல் கிராமத்து அதிரடி ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News