×

தல 60 படத்துக்கு ரெடி ; எடை குறைத்து ஃபிட் ஆன அஜித்: வைரல் புகைப்படம்

Ajith new look for thala 60 movie – நடிகர் அஜித்தின் புதிய கெட்டப் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்த கடந்த 8ம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாகியுள்ளது. இப்படம் அஜித்திற்கு 59வது படமாகும். அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத்தே இயக்குகிறார். இப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில், அஜித்தின்
 
தல 60 படத்துக்கு ரெடி ; எடை குறைத்து ஃபிட் ஆன அஜித்: வைரல் புகைப்படம்

Ajith new look for thala 60 movie – நடிகர் அஜித்தின் புதிய கெட்டப் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்த கடந்த 8ம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாகியுள்ளது. இப்படம் அஜித்திற்கு 59வது படமாகும். அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத்தே இயக்குகிறார். இப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக, அதாவது ஆரம்பம் படத்தில் இருப்பது போல் அவர் காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News