×

மாலை 6 மணிக்கு டிரைலர்… போனி கபூர் அறிவிப்பு – உற்சாகத்தில் தல ரசிகர்கள் !

அஜித், வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் இந்த படம். சமீப காலத்தில் அஜித் நடிப்பில் குறைந்த நாட்களில் உருவான படமாக நேர் கொண்ட பார்வை உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாவது இந்த ஆண்டுதான். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில்
 
மாலை 6 மணிக்கு டிரைலர்… போனி கபூர் அறிவிப்பு – உற்சாகத்தில் தல ரசிகர்கள் !

அஜித், வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் இந்த படம். சமீப காலத்தில் அஜித் நடிப்பில் குறைந்த நாட்களில் உருவான படமாக நேர் கொண்ட பார்வை உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாவது இந்த ஆண்டுதான்.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீடு பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் இன்று திடீரென தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘காத்திருப்பு முடிந்தது. இன்று மாலை 6 மணி முதல் டிரைலர்’ என அறிவித்து படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News