×

நான்காவது இன்னிங்ஸில் 8 சிக்ஸர்கள் – பென் ஸ்டோக்ஸின் புதிய சாதனை !

ஆஸிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் போட்டியில் நான்காம் நாளான நேற்று தோல்வியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் தனியாளாகப் போராடி வெற்றியப் பெற வைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்தான ஒரு இன்னிங்ஸை விளையாடி இங்கிலாந்தை வெற்றிப் பெற செய்த அவர் ஒரு வினோதமான சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸ் விளையாடுவது மிகவும் கடினம். மிகப்பெரிய ஜாம்பவான் பேட்ஸ்மேன்களே நான்காவது இன்னின்ஸில் பல முறை சொதப்பியுள்ளனர். விளையாடுவதே கடினம் என்றால் சிக்ஸர் மழை
 
நான்காவது இன்னிங்ஸில் 8 சிக்ஸர்கள் – பென் ஸ்டோக்ஸின் புதிய சாதனை !

ஆஸிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் போட்டியில் நான்காம் நாளான நேற்று தோல்வியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் தனியாளாகப் போராடி வெற்றியப் பெற வைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்தான ஒரு இன்னிங்ஸை விளையாடி இங்கிலாந்தை வெற்றிப் பெற செய்த அவர் ஒரு வினோதமான சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸ் விளையாடுவது மிகவும் கடினம். மிகப்பெரிய ஜாம்பவான் பேட்ஸ்மேன்களே நான்காவது இன்னின்ஸில் பல முறை சொதப்பியுள்ளனர். விளையாடுவதே கடினம் என்றால் சிக்ஸர் மழை பொழிவது அதை விடக் கடினம் அல்லவா ?… ஆம் நேற்று தனது இன்னிங்ஸில் 8 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வானவேடிக்கை கட்டினார் பென் ஸ்டோக்ஸ்.

இதன் மூலம் நான்காவது இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் 2002-ல்  நியுசிலாந்தின் நாதன் ஆஸ்டில் 11 சிக்ஸர்களும் 2008-ல் நியுசிலாந்தின் டிம் சவுத்தி 9 சிக்ஸர்களும் அடித்தனர். ஆனால் அந்த போட்டிகளை அவர்களால் வென்று கொடுக்க முடியவில்லை. பென் ஸ்டோக்ஸும் நியுசிலாந்தில் பிறந்து பின்னர் இங்கிலாந்தில் குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News