×

இந்திய வீரர்கள் மேல் தாக்குதல் – இ மெயிலால் பதற்றம் !

இந்திய அணி வீரர்கள் இப்போது அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸோடு விளையாடி வருகின்றனர். இந்திய அணி உலகக்கோப்பைக்குப் பிறகு அமெரிக்கா சென்று வெஸ்ட் இன்டீஸுடன் டி20, ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் டெஸ் தொடர் ஆகஸ்டு 22 முதல் ஆண்டிகுவாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்கள்
 
இந்திய வீரர்கள் மேல் தாக்குதல் – இ மெயிலால் பதற்றம் !

இந்திய அணி வீரர்கள் இப்போது அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸோடு விளையாடி வருகின்றனர்.

இந்திய அணி உலகக்கோப்பைக்குப் பிறகு அமெரிக்கா சென்று வெஸ்ட் இன்டீஸுடன் டி20, ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இரு  அணிகள் மோதும் டெஸ் தொடர் ஆகஸ்டு 22 முதல் ஆண்டிகுவாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய வீரர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்கள் மேல் விரைவில் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மின் அஞ்சல் ஒன்று வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த மின்னஞ்சல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்ததாகவும், அதை அவர்கள் ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ இருவருக்கும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த மின்னஞ்சல் குறித்து பிசிசிஐ இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்க அமெரிக்காவில் உள்ள இந்திய வீரர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட அந்த மெயில் போலியானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News