×

இந்திய பவுலர்கள் அபாரம் – 150 ரன்னுக்கு சுருண்ட பங்களாதேஷ் !

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பங்களோதேஷ் அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி 20 தொடர் முடிந்த நிலையில் இன்று டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த வங்கதேச வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த அணியின் முஷ்புஹீர் ரஹிம் (43), மோனிமல் ஹாக்
 
இந்திய பவுலர்கள் அபாரம் – 150 ரன்னுக்கு சுருண்ட பங்களாதேஷ் !

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பங்களோதேஷ் அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி 20 தொடர் முடிந்த நிலையில் இன்று டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த வங்கதேச வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

அந்த அணியின் முஷ்புஹீர் ரஹிம் (43), மோனிமல் ஹாக் (37) ஆகியோர் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்தனர். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆக அந்த அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், முகமது ஷமி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

From around the web

Trending Videos

Tamilnadu News