×

கோஹ்லிக்கு ஓய்வுகொடுக்க நினைக்கும் பிசிசிஐ – பின்னணி என்ன ?

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டி 20 தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கபடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி நவம்பர் மாதம் வங்கதேச அணியுடன் 3 டி 20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக இந்திய அணி விளையாடிய அனைத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருவதால் அவரது உடல்நிலையப் பேணும் பொருட்டு அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான டி
 
கோஹ்லிக்கு ஓய்வுகொடுக்க நினைக்கும் பிசிசிஐ – பின்னணி என்ன ?

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டி 20 தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கபடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி நவம்பர் மாதம் வங்கதேச அணியுடன் 3 டி 20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக இந்திய அணி விளையாடிய அனைத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருவதால் அவரது உடல்நிலையப் பேணும் பொருட்டு அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான டி 20 தொடரில் ஓய்வளிக்க பிசிசிஐ யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் அடுத்த ஆண்டு டி 20 உலகக்கோப்பை வருவதால் அதற்கு இளம்வீரர்களைத் தேர்வு செய்யும் விதமாக அந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News