×

பூம்ரா, ரஹானே தரமான சம்பவம் – 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி !

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 22 ஆம் தேதி நார்த்சவுண்ட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 22 ஆம் தேதி நார்த்சவுண்ட் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணி ரஹானே மற்றும் ஜடேஜாவின் அரைசதத்தால் 297 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் பின் தங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதன் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி கோலி மற்றும் ஹனுமா விஹாரியின் அரைசதத்தாலும் ரஹானேவின் சிறப்பான சதத்தாலும் 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்காக 419  நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர் பூம்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தினறினர்.

ஒரு கட்டத்தில் 37 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து போராடிய அந்த அணி பின்பு சமாளித்து 100 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி 318 ரன்கள் என்ற இமாலய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடிய ரஹானே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News