×

தோனியை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியுமா? – விளாசிய தெண்டுல்கர்

World cup 2019 – நியுசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததில் எல்லோருக்கும் பொருப்பு இருக்கிறது. எப்போதும் தோனி வந்து ஆட்டத்தை முடித்து வைப்பார் என எதிர்பார்க்க முடியாது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதியது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்களை எடுத்தது. அடுத்து இறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து அனைத்து
 
தோனியை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியுமா? – விளாசிய தெண்டுல்கர்

World cup 2019 – நியுசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததில் எல்லோருக்கும் பொருப்பு இருக்கிறது. எப்போதும் தோனி வந்து ஆட்டத்தை முடித்து வைப்பார் என எதிர்பார்க்க முடியாது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதியது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்களை எடுத்தது. அடுத்து இறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

தோனியை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியுமா? – விளாசிய தெண்டுல்கர்

ஆட்டத்தின் நடுவில் இந்திய அணியின் முதல் 6 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை தழுவ இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது. ஆனால், ரவீந்திர ஜடேஜா, தோனி இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்றனர்.

ஆனால், ரவீந்திர ஜடேஜா 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தோனி 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். எனவே, சுலபமாக வெற்றி அடைந்திருக்க வேண்டிய இந்திய அணி தோல்வியை அடைந்தது. எனவே, தோனி ஆட்டத்தை முடித்து வைத்திருக்க வேண்டும் என அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வைத்தனர். அவர் நிறைய பந்துகளை வீணடித்துவிட்டார் எனவும் அவர்கள் கூறினர்.

தோனியை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியுமா? – விளாசிய தெண்டுல்கர்

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ‘ 240 ரன்கள் என்பது பெரிய இலக்கு அல்ல. ஆனால், தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நியுசிலாந்து அணி நெருக்கடியை ஏற்படுத்திவிட்டனர். ரோகித் மற்றும் விராத் கோலி ஆகியோரை சார்ந்திருக்க முடியாது. அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. தோனியும், ஜடேஜாவும் சிறப்பாக ஆடினர். 7வது விக்கெட்டுக்கு 116 ரன் பார்ட்னர்ஷிப் என்பது சிறப்பானது. எப்போதும் தோனி வந்து போட்டியை முடித்துக் கொடுப்பார் என எதிர்பார்ப்பது சரியல்ல. நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது. வில்லியம்சனின் கேப்டன்சிப் பாராட்டும் வகையில் இருந்தது’ என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News