×

ஏமாற்றிய கோஹ்லி & புஜாரா  – காப்பாற்றிய ரஹானே & ராகுல் !

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்துள்ளது. மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று நார்த்சவுண்ட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய
 
ஏமாற்றிய கோஹ்லி & புஜாரா  – காப்பாற்றிய ரஹானே & ராகுல் !

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்துள்ளது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று நார்த்சவுண்ட் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான  மயங்க் அகர்வால்(5), புஜாரா (2), கேப்டன் கோஹ்லி (9) என சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினர். அதன் பின்னர் வந்த ரஹானேவோடு ராகுல் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

சிறப்பாக விளையாடிய ராகுல் 44 ரன்களில் அவுட் ஆக ரஹானே 81 ரன்கள் சேர்த்து அவுட். அதன் பின் வந்த ஹனுமா விஹாரி 32 ரன்கள் சேர்த்தார். ஆட்ட நேர முடிவில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 20 ரன்களுடனும்  ஜடெஜா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமா ரோச் 3 விக்கெட்களும், கேப்ரியல் 2 விக்கெட்களும் சேஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

From around the web

Trending Videos

Tamilnadu News