×

மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் தோனி – புதுரூபம் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து !

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வர்ணனையாளராக பணியாற்ற இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். உலகக்கோப்பைக்கு பிறகு எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தனது பங்களிப்பை செலுத்த
 
மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் தோனி – புதுரூபம் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து !

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வர்ணனையாளராக பணியாற்ற இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.  அதன் பிறகு அவர் ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். உலகக்கோப்பைக்கு பிறகு எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தனது பங்களிப்பை செலுத்த இருக்கிறார்.

இந்தியா வந்துள்ள வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வரும் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் நடக்கிறது. இந்திய அணி விளையாடும் முதல் பகலிரவு போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்புக்குரியதாக்க, முன்னாள் டெஸ்ட் கேப்டன்களை அழைத்து அவர்களை வர்ணனையாளராகப் பேச வைக்கப் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் அனுமதி கோரியுள்ளது. இதில் முன்னாள் கேப்டனான தோனியும் கலந்துகொள்ள இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News