×

தோனி அவுட்டே இல்லை.. மூணாவது அம்பயர் செத்துருவான் – சிறுவன் அழுவும் வீடியோ

சி.எஸ்.அணி நேற்று தோல்வி அடைந்ததையடுத்து, சிறுவன் ஒருவன் அழுது கொண்டே புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 மாதமாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில், சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சென்னை அணியின் தோல்வியை அந்த அணியின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும், தோனி ரன் அவுட் ஆகாமலேயே, மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தது அவர்களுக்கு கடும்
 
தோனி அவுட்டே இல்லை.. மூணாவது அம்பயர் செத்துருவான் – சிறுவன் அழுவும் வீடியோ

சி.எஸ்.அணி நேற்று தோல்வி அடைந்ததையடுத்து, சிறுவன் ஒருவன் அழுது கொண்டே புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 மாதமாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில், சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சென்னை அணியின் தோல்வியை அந்த அணியின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும், தோனி ரன் அவுட் ஆகாமலேயே, மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தது அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில், ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் அழுவும் ஒரு சிறுவன் ’தோனி அவுட்டே இல்லை. மூன்றவாது அம்பயர் தூக்கு போட்டு செத்துருவான்’ எனப் பேசும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் டிவிட்டரில் வைரலாக வலம் வருகிறது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News