×

பண்ட்டை அவருடன் ஒப்பிடாதீர்கள் – கில்கிறிஸ்ட் கருத்து !

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நிலையற்ற தனது ஆட்டத்தால் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். அதேப்போல அவரது டி ஆர் எஸ் அப்பீல் முறைகளும் பெரும்பாலும் தோல்வியில் முடிகின்றன. இதனால் தோனியோடு ஒப்பிட்டு அவர் மட்டம் தட்ட படுகிறார். இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பண்ட் குறித்து பேசியுள்ளார். அவர் ‘தோனியுடன் பண்ட்டை ஒப்பிட்டு அவரை காலி செய்யாதீர்கள். ஏனெனில் இன்னொரு தோனியை உருவாக்க முடியாது என்பது நமக்குத் தெரிந்ததே.
 
பண்ட்டை அவருடன் ஒப்பிடாதீர்கள் – கில்கிறிஸ்ட் கருத்து !

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நிலையற்ற தனது ஆட்டத்தால் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். அதேப்போல அவரது டி ஆர் எஸ் அப்பீல் முறைகளும் பெரும்பாலும் தோல்வியில் முடிகின்றன. இதனால் தோனியோடு ஒப்பிட்டு அவர் மட்டம் தட்ட படுகிறார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பண்ட் குறித்து பேசியுள்ளார். அவர் ‘தோனியுடன் பண்ட்டை ஒப்பிட்டு அவரை காலி செய்யாதீர்கள். ஏனெனில் இன்னொரு தோனியை உருவாக்க முடியாது  என்பது நமக்குத் தெரிந்ததே. ஆஸ்திரேலியாவின் சிறந்த அணியில் இயன் ஹீலி ( விக்கெட் கீப்பர்)  தேர்வு செய்யப்பட்ட போது, நான் அவரைப் போல உருவாக வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் கில்கிறிஸ்டாக இருந்து கொண்டே அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்பினேன். இதையேதான் நான் ரிஷப் பண்ட்டுக்கும் சொல்வேன்.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News